Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காரை சேதப்படுத்திய தம்பி.. கோபமடைந்த அண்ணன் ரோகித் சர்மா.. கடுப்பாகி திட்டிய வீடியோ

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா எப்போதுமே தனது அணி வீரர்களிடம் கேலி கிண்டலாக பேசுவார். குறிப்பாக போட்டியில் ஏதேனும் வீர தவறு செய்து விட்டால் களத்திலே திட்டுவார். அவர் கோபமாக திட்டினாலும் அது காமெடியாக தான் அனைவருக்கும் தெரியும்.

அந்த வகையில் ரோகித் சர்மா பூப்போல் உள்ளம் கொண்டவர். இந்த நிலையில் ரோகித் ஷர்மாவை கௌரவப்படுத்தும் விதமாக மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் கேலரிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு இருந்தது.

Rohit sharma

இதற்கான விழா நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒட்டுமொத்த மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் ரோகித் சர்மாவின் குடும்பத்தினரும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் ரோகித் சர்மா தனது பெற்றோர்களை வரவழைத்து பெயர் பலகையை திறக்க சொன்னது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு ஒரு சகோதரர் இருக்கின்றார். அவருடைய பெயர் விஷால் ஷர்மா. நேற்று விஷால் ஷர்மா ரோஹித் சர்மாவின் காரை எடுத்துக்கொண்டு தனது பெற்றோர்களை அழைத்து வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த உடன் பெற்றோரை ரோகித் சர்மா காரில் வழி அனுப்ப வந்த போது தனது கார் பிற்பகுதி சேதமடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே காரை ஓட்டி வந்த தனது தம்பி விஷாலை அழைத்து, ஏன் கார் சேதமடைந்து இருக்கிறது என்று கேட்டார். இதற்கு அவருடைய தம்பி விஷால் காரை ரிவர்சில் எடுத்தபோது சேதம் அடைந்து விட்டது என்று பதில் அளித்தார். உடனே கோபமடைந்த ரோகித் சர்மா அவ்வளவு வேகமாக ஏன் காரை ஓட்டுகிறாய் என்று கேள்வி எழுப்பி தனது தம்பியை கையை நீட்டி திட்டினார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை குறிப்பிட்ட ரசிகர்கள் வீட்டில் எப்போதுமே பெரிய அண்ணனுக்கு தான் பவர் அதிகம் என்று இதனை குறிப்பிட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் ரோகித் சர்மா தான் ஒரு அண்ணன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டதாகவும், வழக்கம் போல் தம்பிகளை திட்டும் அண்ணனாக ரோகித் சர்மா இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Story first published: Saturday, May 17, 2025, 20:31 [IST]
Other articles published on May 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+