Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: மும்பை அணி இம்முறை 6வது கோப்பையை கண்டிப்பாக வெல்லும்.. 5 காரணங்கள் இதோ

மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மும்பை அணி முதல் ஐந்து போட்டிகளில் வெறும் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்தது. ஆனால் தற்போது அடுத்தடுத்து நான்கு போட்டியில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. ஏப்ரல் 12ஆம் தேதி மும்பை அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்த 10 நாட்களில் மும்பை அணி தலைக்கீழ் மாறி இருக்கிறது. மும்பை அணி தோல்வி அடைந்த போட்டிகளில் கூட அவர்கள் போராடி தான் தோற்றார்களே, தவிர ரன்கள் சரியாக அடிக்காமல் தோற்கவில்லை. இந்த நிலையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஆறாவது முறையாக இம்முறை கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Mumbai Indians

மும்பை அணி கோப்பையை வெல்ல ஏன் அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில்தற்போது தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமே ரோகித் சர்மா தான். ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளாக மிகவும் தடுமாறி வந்தார். ஆனால் அவரை பார்ம்க்கு கொண்டு வந்த பெருமை சிஎஸ்கே அணியையே சேரும்.

தொடர்ந்து இரண்டு போட்டிகளாக ரோஹித் சர்மா அதிரடி காட்டி வருகிறார். இவ்வளவு காலமாக ரோகித் சர்மா ஒரு தவறை செய்து வந்தார். அதாவது ரோகித் பவர் பிளேவில் இரண்டு ஓவர்கள் நின்றாலே போதும் என்ற தப்பு கணக்கு போட்டு வந்தார். இதன் மூலம் அதிரடியாக விளையாடி முயற்சி செய்து சொற்ப ரன்களில் தொடர்ந்து அவர் ஆட்டம் இழந்து வருகிறார்.

ஆனால் தற்போது ரோகித் சர்மா அந்த யுத்தியில் சில மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார். இதன் மூலம் நான் முதல் 10 ஓவர் மேல் வரை களத்தில் நிற்பேன். அப்படி நின்று விளையாடும்போது எவ்வளவு ரன்கள் அடிக்க முடியும் என்பதை நான் பார்ப்பேன் என யுத்தியை மாற்றி இருக்கிறார். இதன் மூலம் ரோகித் சர்மா 10 ஓவருக்கு மேல் நிற்பதன் மூலம் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் அடித்து வருகிறார்.

இது மும்பை அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. அது மட்டுமில்லாமல் ரோகித் சர்மா வெறும் இம்பேக்ட் வீரராக தான் களமிறங்குகிறார். இது ரோகித் சர்மாவுக்கு உள்ள சுமையை குறைக்கின்றது. இந்த பட்டியலில் இருக்கும் இரண்டாவது காரணம் சூரியகுமார் யாதவ், மும்பை அணியின் வெற்றிக்கு சூரியக்குமாரி யாதவ் ஒரு முதுகெலும்பாகவே இருக்கின்றார்.

தற்போது ஐபிஎல் தொடரில் சூரியகுமார் யாதவ், ஒன்பது போட்டிகளில் விளையாடி 373 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதம் அடங்கும். சூரியகுமார் ஸ்டிரைக் ரேட் 166 என்று அளவில் இருக்கின்றது. சூரியகுமார் யாதவ் தற்போது மூன்றாவது வீரராக களமிறங்குகிறார். சூரியகுமார் யாதவ் அதிரடி காட்டுவதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் மேலும் வலுவாக மாறி இருக்கிறது.

இதனால் எவ்வளவு இலக்கை நிர்ணயித்தாலும் அதனை துரத்தக்கூடிய பலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா. பும்ரா தன்னுடைய ஆக்ரோஷமான யாக்கர்கள் மூலம் எதிர் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துகிறார்.

இது குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் தோனியே பாராட்டி இருந்தார். உலகின் சிறந்த டெட் பவுலர்களின் ஒருவராக இருக்கின்றார். அவருடைய பந்துவீச்சில் ரன்கள் குவிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக மாறிவிட்டது என்று கூறினார். இந்த சீசனில் முதல் சில போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை. அப்போதெல்லாம் மும்பை அணி தோல்வியை தழுவியது.

ஆனால் பும்ரா வந்தவுடன் அந்த அணியின் பந்துவீச்சு பலம் பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பும்ரா அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று அறிவுரைகளையும் வழங்கி வருகின்றார். பும்ரா தன்னுடைய அபாய யாக்கர்கள் மூலம் ரன்களை கட்டுப்படுத்துகிறார். இது மும்பை அணிக்கு ஒரு பெரிய வரப்பிரசாதமாக மாறிவிட்டது. இதேபோன்று மும்பை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறி இருப்பது அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பெளல்ட் தான்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சொத்தாக இருந்தார். ஆனால் அவரை தேவையில்லாமல் மும்பை அணி அணியை விட்டு வெளியே அனுப்பியது. தற்போது அவர் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பி இருப்பதன் மூலம் பந்துவீச்சு படை பலமாக மாறி இருக்கிறது. இதுவரை ட்ரெண்ட் போல்ட் ஒன்பது போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பவுல்ட் ஜோடி சேர்ந்து பந்து வீசும் போது அது எதிரணிக்கு தூங்கா இரவுகளையே பரிசாக தருகின்றது.

பவர் பிளேவில் இறுதியில் பும்ரா கூட்டணி அமைத்துக் கொண்டு எதிரணி பேட்ஸ்மேன்களை மும்பை பவுலர்கள் வேட்டையாடி வருகின்றனர். மும்பை அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக மாறி இருப்பது ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவண்டர் திறமை தான். மும்பை அணி கடந்த காலங்களில் தோற்றத்திற்கு ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இல்லாமல் போனதுதான்.

தற்போது ஹர்திக் தன்னுடைய பந்துவீச்சில் பெரிய அளவு முன்னேறி இருக்கிறார். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் பந்து வீசிய ஹர்திக் மொத்தம் 12 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்
குறிப்பாக நடு ஓவர்களில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்திருக்கிறது. இதனால் ஹர்திக் மூவரை தொட முடியாமல் எதிரணி வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் ஹர்ஜிக் பாண்டியா அதிரடியாக விளையாடுகிறார்.

எட்டு பந்துகளில் 20 ரன்கள், 10 பந்துகளில் 25 ரன்கள் என அதிரடி காட்டுவதால் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் கிடைத்திருக்கின்றது. இதேபோன்று தீபக் சாகரும் தற்போது நன்றாக செயல்பட்டு வருகிறார். நேற்று சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கூட தீபக்சாகர் பவர் பிளேவில் நான்கு ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். இதன் மூலம் தீபக்சாகர் ரன்களை நன்றாக கட்டுப்படுத்துகிறார்.

இது அனைத்தும் இம்முறை மும்பை கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதையே காட்டுகிறது.இதனால்தான் கோப்பையை மும்பை பெயரில் எழுதுங்க என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மும்பை கடைசியாக 2020 ஆம் ஆண்டு தான் கோப்பையை வென்றது. தற்போது ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பலமான அணியாக உருவெடுத்திருக்கிறது.

Story first published: Thursday, April 24, 2025, 14:30 [IST]
Other articles published on Apr 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+