Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: கலங்கிய ரோஹித்.. மும்பை இந்தியன்ஸ் டீமை என்ன டா பண்ணி வச்சுருக்கீங்க? சோகத்தில் ரசிகர்கள்

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த பிறகும், அதனைத் தற்காக்க முடியாமல் நிலைகுலைந்ததைக் கண்டு, மைதானத்தில் அமர்ந்திருந்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா மிகுந்த வேதனையுடனும், ஏமாற்றத்துடனும் காணப்பட்ட காட்சிகள் ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற இந்த 41-வது லீக் போட்டியில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் குவித்தது. ரையான் ரிக்கல்டன் 55 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய ஹைதராபாத் அணி, மும்பையின் பந்துவீச்சை துவம்சம் செய்தது. டிராவிஸ் ஹெட் 76 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 65 ரன்களும் விளாச, ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களிலேயே 249 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2026 MI vs SRH Rohit Sharma Emotional After Mumbai Indians Record another Defeat in IPL 2026

கடந்த சில போட்டிகளாக காயம் காரணமாக ரோஹித் சர்மா மும்பை அணியில் விளையாடவில்லை. அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. மைதானத்தில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹித், மும்பை பந்துவீச்சாளர்கள் ஹைதராபாத் வீரர்களின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியதைக் கண்டு மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார். குறிப்பாக, ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஜாம்பவான்கள் கூட விக்கெட் எடுக்க முடியாமல் 54 ரன்களை வாரி வழங்கியபோது, ரோஹித் சர்மாவின் முகம் வாடிப் போனது.

தனது கடின உழைப்பால் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த அணி, இப்போது தனது சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடைவதைப் பார்த்து ரோஹித் நிலைகுலைந்து போனார். போட்டி முடிந்ததும் அவர் மிகுந்த விரக்தியில் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2026 ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் மும்பை அணி 6-ல் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒருபுறம் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், மறுபுறம் ரோஹித் சர்மா காயம் காரணமாக விளையாட முடியாமல் தவிப்பது மும்பை ரசிகர்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. ரோஹித் சர்மாவின் அனுபவமும், களத்தில் அவர் எடுக்கும் முடிவுகளும் இல்லாததே மும்பை அணியின் இந்த மோசமான நிலைக்குக் காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ரோஹித் விரைவில் குணமடைந்து அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Thursday, April 30, 2026, 8:36 [IST]
Other articles published on Apr 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+