IPL 2026: கொல்கத்தா அணியின் கேப்டனாக வரும் ரோகித் சர்மா.. மும்பை இந்தியன்ஸ் தந்த விளக்கம்
மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் அடுத்தடுத்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் மினி ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் எந்த வீரர்களை தக்க வைக்கிறோம். எந்த வீரர்களை விடுவிக்கின்றோம் என்ற பட்டியலை அறிவிக்க வேண்டும்.
தற்போது அந்த பட்டியலை நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும் என பிசிசிஐ கெடு விதித்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கொல்கத்தா அணி தங்கள் புதிய பயிற்சியாளராக அபிஷேக் நாயரை நியமித்துள்ளது.

இந்த நிலையில்தான் சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் தீயாக பரவியது. அதில் அபிஷேக் நாயரின் உற்ற நண்பராக ரோகித் சர்மா இருப்பதால் அதற்கான முதல் கட்ட பணி தான் இந்த காய் நகர்த்தல் என்று தெரிவிக்கப்படும். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் வேறு அணிக்கு மாறும் முடிவில் இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. எனினும் இது குறித்து தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விளக்கத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் ரோகித் சர்மாவின் புகைப்படத்தை பதிவிட்டு சூரியன் மீண்டும் உதிக்கலாம்.
ஆனால் போர்வீரருக்கு அது கடினம் கிடையாது. கண்டிப்பாக நடக்காது என்று பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கானின் வசனத்தை குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு ரோஹித் சர்மா வேறு எங்கும் செல்ல மாட்டார் என்பதை திட்டவட்டமாக அந்த அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் ரோகித் சர்மா அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்பது உறுதியாக இருக்கிறது. 38 வயதான ரோஹித் சர்மா, 2025 ஐபிஎல் சீசனில் 15 போட்டிகளில் விளையாடி 418 ரன்கள் அடித்திருந்தார். இதில் நான்கு அரை சதம் அடங்கும். 2024 ஆம் ஆண்டு சீசனில் 14 போட்டியில் விளையாடி 417 ரன்கள் அடித்திருந்தார். இதில் ஒரு சதம் ஒரு அரை சதம் அடங்கும்.


Click it and Unblock the Notifications