Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் இதுவரை நிகழாத அதிசயம்.. ரோஹித் - ரிக்கெல்டன் ஜோடி சாதனை

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ரையன் ரிக்கெல்டன் ஜோடி மும்பை இந்தியன்ஸ் அணியில் வரலாற்றுச் சாதனை செய்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் முதல் பல ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் செய்யாத சாதனையை ரோஹித் - ரிக்கெல்டன் ஜோடி செய்துள்ளனர்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரையன் ரிக்கெல்டன் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 143 ரன்களைக் குவித்தது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 3 முறை 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் மும்பை இந்தியன்ஸ் ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

IPL 2026 Rohit Sharma and Ryan Rickelton Set Unprecedented Partnership Record for Mumbai Indians

இதற்கு முன்னதாக ரோஹித் சர்மா - இஷான் கிஷன், சச்சின் டெண்டுல்கர் - அம்பதி ராயுடு மற்றும் பார்த்திவ் படேல் - லென்ட் சிம்மன்ஸ் ஆகிய ஜோடிகள் தலா 2 முறை மட்டுமே 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். தற்போது அந்த ஜாம்பவான்களின் சாதனையை இந்த ஜோடி முறியடித்துள்ளது. மேலும், இவர்கள் அமைத்த 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் என்பது மும்பை இந்தியன்ஸ் அணியின் வரலாற்றில் எந்தவொரு விக்கெட்டிற்கும் எடுக்கப்பட்ட 4-வது உயர்ந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, நிக்கோலஸ் பூரனின் அதிரடியால் 20 ஓவர்களில் 228 ரன்களைக் குவித்தது. பூரன் வெறும் 21 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 63 ரன்களை விளாசினார். ஒரு கட்டத்தில் 240 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட லக்னோவை, கார்பின் போஷ் தனது அபார பந்துவீச்சால் கட்டுப்படுத்தினார்.

IPL 2026: மனமுடைந்து போன பண்ட்.. 228 ரன் எடுத்தும் தோற்றது குறித்து விரக்தி.. பிளே ஆப் போக முடியாது

IPL 2026: மனமுடைந்து போன பண்ட்.. 228 ரன் எடுத்தும் தோற்றது குறித்து விரக்தி.. பிளே ஆப் போக முடியாது

229 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு, தொடைப்பகுதி காயத்திலிருந்து மீண்டு வந்த ரோஹித் சர்மா அதிரடித் தொடக்கம் கொடுத்தார். அவர் 84 ரன்கள் விளாசி சதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். அவருக்கு இணையாக மிரட்டிய ரையன் ரிக்கெல்டன் 83 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி ஆட்டமிழந்த பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா சொற்ப ரன்களில் வெளியேறினாலும், நமன் திர் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் மும்பை அணியை 18.4 ஓவர்களிலேயே 229 ரன்கள் எடுக்க வைத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தனர். இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கனவை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளது.

Story first published: Tuesday, May 5, 2026, 8:37 [IST]
Other articles published on May 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+