மும்பை : கிரிக்கெட்டின் மெஸ்ஸி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் டிவில்லியர்ஸ். ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலே மிக சிறந்த அதிரடி வீரர் என பெயர் பெற்ற டிவில்லியர்ஸ் 360 டிகிரி கோணத்திலும் பந்துகளை அடிக்கக்கூடிய வீரராக திகழ்ந்தார்.
இப்படி ஒரு வீரனை ஒரு ஐபிஎல் அணி வேண்டாம் என்று நீக்கி இருந்தால் அது எவ்வளவு பெரிய தவறான முடிவாக இருந்திருக்கும். அப்படி ஒரு தவறு ஐபிஎல் தொடரில் நடந்திருக்கிறது. ஆர் சி பி அணிக்காக டிவில்லியர்ஸ் 11 ஆண்டுகள் விளையாடி 4521 ரன்கள் அடித்திருக்கிறார்.

ஆர் சி பி அணிக்காக 2011 ஆம் ஆண்டு தான் டிவில்லியர்ஸ் விளையாட தொடங்கினார். அதற்கு முன்பு அவர் 2008 முதல் 10 ஆம் ஆண்டு வரை டெல்லி அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டுள்ள டிவில்லியர்ஸ், 2010 ஆம் ஆண்டு சீசனில் நான் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது என்னை டெல்லி அணி நிர்வாகிகள் அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்தார்கள்.
நானும் சென்றேன் அப்போது அடுத்த ஆண்டு உங்களை நாங்கள் தக்க வைத்துக் கொள்வோம் என்று எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்கள். அப்போது என்னுடன் டேவிட் வார்னரும் அந்த மீட்டிங்கில் இருந்தார். ஆனால் இரண்டு வாரத்திற்கு பிறகு எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் என்னை டெல்லி அணி விடுவித்து விட்டார்கள்.
ஐபிஎல் தொடரின் அப்போதெல்லாம் நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் இடையே சரியான ஒரு தொடர்பு இருக்காது.ஆனால் இப்போது வேறு மாதிரி சூழல் வந்து விட்டன. ஆனால் அப்போது நன்றாக இல்லை. 2019 சீசனில் நான் வெறும் ஐந்து போட்டிகள் தான் விளையாடுகிறேன் என நினைக்கிறேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற சந்தேகம் எனக்கு அப்போது வந்து விட்டது.
சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் பெரிய அளவில் அப்போது சாதிக்கவில்லை. அப்போதுதான் ஏலம் நடைபெற்றது. அதில் அதிர்ஷ்டவசமாக நான் rcb அணியால் தேர்வு செய்யப்பட்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கை முற்றிலுமாக மாறியது. ஆர் சி பி அணியுடன் எனக்கு நல்ல நினைவுகள் அதிகம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.