மொஹாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி ஒரு பந்து எஞ்சிய நிலையில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4 நாட்களாக கடைசி ஓவர் வரை ஆட்டம் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
குஜராத் அணியில் இளம் வீரர் யாஷ் தயாள் நீக்கப்பட்டு, அனுபவ வீரர் மோகித் சர்மா சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி சார்பாக ஷிகர் தவான் - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி களமிறங்கியது. முகமது ஷமி வீசிய முதல் ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் டக் அவுட்டாகி வெளியேற, அவரைத் தொடர்ந்து கேப்டன் ஷிகர் தவான் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் பஞ்சாப் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் மேத்யூ ஷார்ட் அதிரடியால் பஞ்சாப் அணி பவர் பிளே ஓவர்கள் முடிவில் 52 ரன்கள் சேர்த்தது. பின்னர் ரஷித் கான் பந்துவீச்சில் ஷார்ட் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணியின் ரன் குவிப்பு குறைந்தது. ஓவருக்கு 6 ரன்கள் எடுப்பதே பெரிய விஷயமாக மாறியது.
மறுபக்கம் ஜித்தேஷ் சர்மா 25 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ராஜபக்சே 26 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
சாம் கரணும் 22 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுக்க, ஷாரூக்கான் 9 பந்தில் 22 ரன்கள் சேர்த்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய குஜாத் அணியன் சாஹா 19 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார். ஒருபுறம் சுப்மன் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபுறம் சாய் சுதர்சன் 19 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் எளிதாக குஜராத் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணி வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட போது, சாம் கரண் யாக்கரில் சுப்மன் கில் ஸ்டம்புகள் சிதறியது. இதனையடுத்து தொடர்ந்து யாக்கர் பந்துகளை புல்லட் போல் சாம் கரண் இறக்கினார். இதனையடுத்து கடைசி 2 பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது ஐஸ் மேன் ராகுல் திவாட்டியா லாகவமாக பந்தை ஸ்குப் செய்து பவுண்டரி அடித்தார். இதன் மூலம் 3வது வெற்றியை பெற்ற குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.