Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்லே வேண்டாம்.. வேற வேலை இருக்கு.. மொத்த தொடரையும் புறக்கணிக்கும் அந்த அணி.. ஷாக்கிங் முடிவு

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் வங்கதேச வீரர்கள் கலந்து கொள்வது சந்தேகம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த அணியை சேர்ந்த வீரர்கள் தொடர் மொத்தத்தையும் புறக்கணிக்க வாய்ப்புள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று சென்னையில் நடக்கிறது. மினி ஏலமாக இது சென்னையில் நடைபெற உள்ளது.

1000க்கும் அதிகமான வீரர்கள் இந்த ஏலத்திற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது.

 வங்கதேசம்

வங்கதேசம்

இந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ ஒவ்வொரு நாட்டு அணிக்கும் கடிதம் எழுதியது. வீரர்களை ஏப்ரல் முதல் ஜூன் வரை விடுவிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியது. இதற்கு வங்கதேசம் தவிர அனைத்து அணிகளும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து , மேற்கு இந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா என்று எல்லா அணிகளும் இதற்கு ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் வங்கதேசம் அணி இந்த சீசனில் கலந்து கொள்ளாது.

ஹசன்

ஹசன்

வங்கதேசத்தில் இருந்து ஷாகிப் அல் ஹசன் உட்பட 4 வீரர்கள் ஐபிஎல் ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த தொடரில் கலந்து கொள்வது சந்தேகம்தான். இவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் தொடர் இருக்கிறது.

சிக்கல்

சிக்கல்

இந்த தொடர் காரணமாகவும், வேறு சில தொடர்களில் இந்த அணி கலந்து கொள்ள உள்ளதாலும் ஐபிஎல்லில் முதல் பாதியிலும் கடைசி பாதியிலும் கலந்து கொள்ள மாட்டார்கள். கொரோனா விதிகள் காரணமாக இடையில் இருக்கும் போட்டிகளில் இவர்கள் இணைவதும் கடினம். இதனால் இந்த வருடம் வங்கதேச வீரர்கள் ஐபிஎல் தொடரில் வாய்ப்பு பெற மாட்டார்கள்.

 ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல்லில் இந்த வருடம் முஸ்தபிசர் ரஹ்மான், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் நல்ல தொகைக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு பேருமே நல்ல டி 20 வீரர்கள். ஆனால் திடீர் என்று வங்கதேச கிரிக்கெட் போர்ட் ஐபிஎல்லில் கலந்து கொள்வதற்கு எதிராக முடிவு செய்துள்ளது .

Story first published: Thursday, February 18, 2021, 9:04 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+