ஐபிஎல் 2021 ஏலம் LIVE: மூத்த வீரர்கள் ஷான் மார்ஷ், கோரி ஆண்டர்சன்.. ஏலம் எடுக்கப்படவில்லை
சென்னை: 14வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் இன்று சென்னையில் நடக்க உள்ளது.
2021 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு இன்று நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது. அதேபோல் டிரேடிங், ரீடெயின் செயல்பாடுகளும் நடந்து முடிந்துவிட்டது.
இந்த நிலையில் 8 அணிகளும் கலந்து கொள்ளும் மினி ஏலம் இன்று சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு நடக்க உள்ளது. 1000க்கும் அதிகமான வீரர்கள் இந்த ஏலத்திற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இதில் பிசிசிஐ இறுதியாக 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது. இதில் 164 உள்நாட்டு, 125 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தோடு ஐபிஎல் 2021 ஏலம் முடிவிற்கு வந்தது
அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 20 லட்சம் ரூபாய்க்கு கடைசி வீரராக அர்ஜுன் ஏலம் எடுக்கப்பட்டார்.
கேதார் ஜாதவ் ரூ. 2 கோடிக்கு ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்
ஹரி நிஷாந்த் 20 லட்சம் ரூபாய்க்கு சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக அணியில் ஓப்பனிங் இறங்கிய வீரர் ஹரி நிஷாந்த்.
ஹர்பஜன் சிங் கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2 கோடி ரூபாய்க்கு ஹர்பஜன் ஏலம் எடுக்கப்பட்டார்.
பகத் வர்மா என்ற இளம் வீரர் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 20 லட்சம் ரூபாய்க்கு பகத் ஏலம் எடுக்கப்பட்டார்.
எம். ஹரி சங்கர் ரெட்டி என்ற இளம் வீரர் சிஎஸ்கே அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 20 லட்சம் ரூபாய்க்கு சங்கர் ரெட்டி ஏலம் எடுக்கப்பட்டார்.
டேனியல் கிறிஸ்டின் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 4.8 கோடி ரூபாய்க்கு டேனியல் கிறிஸ்டின் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2021: பெவியன் ஆலன் 75 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் எடுக்கப்பட்டுள்ளார்
2021 ஐபிஎல் ஏலத்தில் கருண் நாயர் ஏலம் எடுக்கப்படவில்லை
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லபுசேன் ஏலம் எடுக்கப்படவில்லை
நியூசிலாந்து வீரர் கைல் ஜெமிஷனை 15 கோடிக்கு பெங்களூர் அணி ஏலம் எடுத்தது.
நியூசிலாந்து வீரர் கைல் ஜெமிஷனை எடுக்க கடுமையான போட்டி. 14 கோடி ரூபாயை தாண்டி ஜெமிஷனை எடுக்க முயற்சி.
புஜாராவை சிஎஸ்கே அணி 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டை ஏலம் எடுத்தது சிஎஸ்கே.
நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன் ஏலம் எடுக்கப்படவில்லை
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷான் மார்ஷ் ஏலம் எடுக்கப்படவில்லை
இளம் வீரர் கே கவுதம் சிஎஸ்கே அணியால் ரூ. 9.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இளம் வீரர் கே கவுதமை எடுக்க ஐபிஎல் அணிகள் கடும் போட்டி. சிஎஸ்கே அணியும் கவுதமை எடுக்க போட்டி. பெங்களூரை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா கவுதம். 9 கோடி ரூபாய் தாண்டி இவர் ஏலம் கேட்கப்பட்டு வருகிறார்.
தமிழக வீரர் ஷாருக்கான் 5.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2021: தமிழக வீரர் ஷாருக்கானை ஏலம் எடுக்க பல அணிகள் ஆர்வம். ஷாருக்கானை எடுக்க டெல்லி, பெங்களூர் அணிகள் ஆர்வம்.
ஐபிஎல் 2021: ஹர்பஜன் சிங் ஏலம் எடுக்கப்படவில்லை
டெல்லி அணி மூலம் உமேஷ் யாதவ் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படடார்
நேத்தன் குல்டர் நைல் மும்பை மூலம் 5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்
பஞ்சாப் அணி மூலம் ஜய் ரிச்சர்ட்சன் ரூ. 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
ஐபிஎல் 2021: ஆடம் மில்னே மும்பை அணியால் 3.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்
உலகின் நம்பர் 1 டி 20 பேட்ஸ்மேனை அணியில் எடுத்தது பஞ்சாப். வெறும் 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி டேவிட் மாலனை எடுத்தது.
16.25 கோடி ரூபாயை தாண்டியும் கிறிஸ் மோரிசுக்கு ஏலம் செல்கிறது
கிறிஸ் மோரிஸை எடுக்க முக்கிய ஐபிஎல் அணிகள் தீவிரம். 14.50 கோடி ரூபாயை தாண்டியும் ஏலம் செல்கிறது.
கிறிஸ் மோரிஸை எடுக்க ஐபிஎல் அணிகள் தீவிரம். மும்பை, பெங்களூர் அணிகள் இவரை எடுக்க தீவிரம். 8 கோடி ரூபாயை தாண்டியும் ஏலம் செல்கிறது.
சிவம் துபே பெங்களூர் அணி மூலம் ஏலம் எடுக்கப்பட்டார். பெங்களூர் அணியால் ரிலீஸ் செய்யப்பட்டவர் மீண்டும் ஏலம் எடுக்கப்பட்டார்.
மொயின் அலியை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது
மொயின் அலி ஏலம் 7 கோடியை தாண்டி செல்கிறது
சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலர்கள் குறைவாக உள்ளதால் ஏலம் எடுக்க முடிவு. அதிக தொகை சென்றாலும் மொயின் அலியை எடுக்க சிஎஸ்கே பிளான். பஞ்சாப் அணியும் சிஎஸ்கேவுடன் சேர்ந்து மொயின் அலியை எடுக்க முயற்சி.
மொயின் அலியை எடுக்க சிஎஸ்கே அணி ஆர்வம். மேக்ஸ்வெல் கிடைக்காத நிலையில் மொயின் அலியை எடுக்க சிஎஸ்கே முடிவு. 4.2 கோடி ரூபாயை தாண்டி ஏலம் சென்று கொண்டு இருக்கிறது.
கொல்கத்தா அணி மூலம் ஷாகிப் அல் ஹசன் 3.20 கோடிக்கு ஏலம்
ஷாகிப் அல் ஹசனை எடுக்க கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் ஆர்வம்
கேதார் ஜாதவ் ஏலம் எடுக்கப்படவில்லை
மேக்ஸ்வெல்லை பெங்களூர் அணி ஏலம் எடுத்தது, 14.25 கோடி ரூபாய்க்கு மேக்ஸ்வெல்லை பெங்களூர் ஏலம் எடுத்தது.
ஸ்மித்தை ஏலம் எடுத்தது.. டெல்லி கேப்பிடல்ஸ்
11.50 கோடியை தாண்டிய பின்பும் மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே தீவிரம். மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே, பெங்களூர் இடையே கடும் போட்டி.
10 கோடியை தாண்டிய பின்பும் மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே தீவிரம்
சிஎஸ்கே அணியிடம் 19 கோடி ரூபாய் மட்டுமே உள்ள நிலையில் தீவிர முயற்சி. 9 கோடி ரூபாய்க்கு அதிகமாக மேக்ஸ்வெல் ஏலம் கேட்கப்படுகிறார் .
7 கோடியை தாண்டி மேக்ஸ்வெல் ஏலம் சென்று கொண்டு இருக்கிறது
மேக்ஸ்வெல்லை எடுக்க சிஎஸ்கே, பெங்களூர் இடையே கடும் போட்டி
ஐபிஎல் 2021: ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் ஏலம் எடுக்கப்படவில்லை
டெல்லி அணி ஸ்மித்தை ரூபாய் 2.2 கோடிக்கு ஏலம் எடுத்தது
ஐபிஎல் 2021: ஆஸி. வீரர் ஸ்மித் ஏலம் விடப்படுகிறார், பெங்களூர் அணி ஸ்மித்தை ஏலம் எடுக்க முயற்சி.
ஐபிஎல் 2021: அதிரடி வீரர் ஜேசன் ராய் ஏலம் எடுக்கப்படவில்லை
ஐபிஎல் 2021: அலெக்ஸ் ஹேல்ஸ் ஏலம் எடுக்கப்படவில்லை
கருண் நாயர் ஏலம் எடுக்கப்படவில்லை
ஐபிஎல் 2021: கருண் நாயர் முதல் வீரராக ஏலம் விடப்படுகிறார்
2021 ஐபிஎல் தொடரை விவோ நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது. கடந்த வருடம் ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்ஸர் செய்த நிலையில் மீண்டும் விவோ நிறுவனம் ஐபிஎல்லை வழங்குகிறது.
ஐபிஎல் 2021: 8 அணிகள் கலந்து கொள்ளும் மினி ஏலம் சென்னையில் தொடங்கியது. 292 வீரர்கள் இன்று ஏலம் விடப்பட உள்ளனர் .
Trophy in all its glory 🏆😎 #IPLAuction pic.twitter.com/XBcC0NUkaX
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
ஐபிஎல் 2021 ஏலம்: சிஎஸ்கே அணி தமிழக வீரர்கள் மீது குறி வைக்க வாய்ப்பு
தமிழக வீரர்கள் மீது கவனம் செலுத்துவோம் - சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங்
ஐபிஎல் 2021 ஏலம்: டேவிட் மாலன், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் பின்ச், மேக்ஸ்வெல் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு
தமிழக வீரர் ஷாருக்கான், கேரள வீரர் அசாருதீன் ஆகியோர் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்பு
ஐபிஎல் 2021 ஏலம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது
மொத்தம் 291 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர்
8 அணிகள் சென்னையில் நடக்கும் மினி ஏலத்தில் கலந்து கொள்கின்றன
164 உள்நாட்டு, 125 வெளிநாட்டு வீரர்கள், 3 துணை நாடுகளின் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
இதில் பிசிசிஐ 292 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்தது
1000-திற்கும் அதிகமான வீரர்கள் இந்த ஏலத்திற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்தனர்
14வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை சென்னையில் நடக்கிறது
14வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் வரும் நாளை சென்னையில் நடக்கிறது



Click it and Unblock the Notifications