Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தமிழர்தான் வேண்டும்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் 7 டீம்.. எதிர்பாராத டிவிஸ்ட்.. ஏன் தெரியுமா?

சென்னை: 2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வருகிறது.

அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கும் 2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று சென்னையில் நடக்கிறது. மினி ஏலமாக இது சென்னையில் நடைபெற உள்ளது.

இதில் பிசிசிஐ இறுதியாக 291 வீரர்களை ஏலத்திற்கு தேர்வு செய்துள்ளது. சென்னையில் நடக்கும் இந்த ஏலத்தில் பல முக்கிய வீரர்கள் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

எப்படி

எப்படி

2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் ஷாருக்கான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வருகிறது. ஐபிஎல் என்றாலே அது அதிரடி பேட்டிங் மற்றும் பினிஷிங்குக்கு பெயர் போனது. கடைசி இரண்டு ஓவரில், ஒரு ஓவரில் முடிவை மாற்றிய பல வீரர்கள் இருக்கிறார்கள்.

பினிஷிங்

பினிஷிங்

இதனால் ஐபிஎல்லில் பினிஷிங் செய்யும் வீரர்களுக்கு எப்போதும் மவுசு இருக்கும். அந்த வகையில் தமிழக வீரர் ஷாருக்கான் இந்த தொடரில் அதிக கவனம் ஈர்ப்பார் என்கிறார்கள். தமிழக அணியில் கடந்த சில வருடங்களாக இவர் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

டி 20 பார்மெட்

டி 20 பார்மெட்

அதிலும் டி 20 பார்மெட் போட்டிகளில் அதிகம் கவனம் ஈர்த்து வருகிறார். சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழக அணி வெற்றிபெற இவர் முக்கிய காரணமாக இருந்தார். அதிலும் இவர் 19 பந்தில் 40 ரன்கள் அடித்தது தொடங்கி ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக பினிஷிங் செய்தார்.

போட்டி

போட்டி

எல்லா அணியிலும் தற்போது பினிஷிங் செய்ய ஆல் குறைவாக இருக்கிறார். மும்பை அணியில் மட்டுமே பொல்லார்ட், பாண்டியா போன்ற பினிஷர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாரூக்கானை மற்ற 7 அணிகளும் குறி வைக்கும் என்று கூறப்படுகிறது.

குறி வைக்கும்

குறி வைக்கும்

ஏற்கனவே இவரை ராஜஸ்தான், கொல்கத்தா அணி சோதனைக்கு அழைத்துள்ளது. இன்று நடக்கும் ஏலத்தில் ஷாருக்கான் மிக அதிக தொகைக்கு செல்ல போகும் இளம் வீரராக இருப்பார். இவருக்கு அடுத்து கேரளா வீரர் அசாருதீன் அதிக தொகைக்கு செல்ல வாய்ப்புள்ளது .

Story first published: Thursday, February 18, 2021, 9:55 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+