6வது ஐபிஎல் கோப்பை மும்பைக்கு தான் போல? IPL ஏலத்தில் சைலண்டாக பெரிய சம்பவம் செய்த அம்பானி குடும்பம்
துபாய் : ஐபிஎல் மினி ஏலத்தில் மும்பை அணி சைலண்டாக பெரிய காரியத்தை செய்து வருகிறது. இந்த மினி ஏலத்தில் மும்பை அணி வித்தியாசமான ஒரு யூக்தியை பயன்படுத்தி வருகிறது.
மும்பை அணி கடந்த முறை தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் அவர்களுடைய பேட்டிங் நன்றாக இருந்தாலும் பௌலிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதனை சரியாக புரிந்து கொண்ட மும்பை அணி இந்த மினி ஏலத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களுடைய பந்துவீச்சு படையை பலமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். இந்த மினி ஏலம் தொடங்கியதில் இருந்தே மும்பை அணி வெறும் வேகப்பந்துவீச்சாளர்களை குறி வைத்து காய்களை நகர்த்துகின்றனர்.குறிப்பாக வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை மும்பை ஆர்வமாக வாங்கி வருகிறார்கள்.
மும்பை அணியில் ஏற்கனவே இந்திய பேட்ஸ்மேன்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். தற்போது அவர்களிடம் வேக பந்துவீச்சாளர்களாக பும்ராவை தவிர வேறு யாரும் இல்லை. இதனை மனதில் வைத்துக் கொண்டுதான் பாட் கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற வீரர்களை வாங்க மும்பை ஆர்வம் காட்டியது.
ஆனால் விலை அதிகமான உடன் அவர்கள் தங்களுடைய பிளான் பி யை கையில் எடுத்தார்கள். குறிப்பாக தென்னாப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோயிட்சே அபாரமாக பந்து வீசக்கூடியவர்.
ஒரு முனையில் பும்ரா மறுமுனையில் ஜெரால்ட் பந்து வீசினால் நிச்சயம் எதிரணி பயப்படும். அந்த வகையில் மும்பை அணி சிஎஸ்கே வாங்க நினைத்த ஜெரால்டை வெறும் 5 கோடி ரூபாய் கொடுத்து தட்டிச் சென்றனர். இதே போன்று பேட் கம்மின்ஸ் கிடைக்கவில்லை என தெரிந்தவுடன் பிளான் பியை கையில் எடுத்து இலங்கை அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான மதுசங்காவை கையில் எடுத்தார்கள்.
மது ஷங்கா ரோகித் சர்மாவுக்கே தண்ணீர் காட்டிய திறமை உடைய வீரராக இருக்கிறார். ஏற்கனவே அவர்கள் ஏலத்திற்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவை வாங்கி இருந்தார்கள். இதன் மூலம் மும்பை அணி தற்போது பலமான அணியாகவே விளங்குகிறது. இதனால் ஆறாவது முறையாக கோப்பையை வாங்க மும்பை அணி கடுமையாக போராடும்.
Story first published: Tuesday, December 19, 2023, 16:55 [IST]
Other articles published on Dec 19, 2023


Click it and Unblock the Notifications