IPL 2024 - ஒவ்வொரு ஏலத்திலும் அதிக விலைக்குபோன வீரர் யார் தெரியுமா? எத்தனை கோடி? முழு பட்டியல்
மும்பை : ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு யார் போக உள்ளார் என்பது குறித்து ரசிகர்கள் தற்போது கணக்கு போட தொடங்கி விட்டார்கள்.
நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் போன்ற வீரர்கள் எல்லாம் இம்முறை அதிக தொகைக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் ஐபிஎல் தொடங்கிய சீசன் இருந்து கடந்த 2023 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஏலத்திலும் யார் அதிக தொகைக்கு சென்றார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை 6.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு ஆர் சி பி அணி பீட்டர்சனையும் சிஎஸ்கே அணி பிளிண்டாப்பையும் ஏழரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 2010 ஆம் ஆண்டு மும்பை அணி பொலார்டை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது.
2011 ஆம் ஆண்டு கேகேஆர் அணி கம்பீரை 14 கோடியே 90 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. 2012 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி ஜடேஜாவை 12 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு எடுத்தது.2011 ஆம் ஆண்டு மும்பை அணி மேக்ஸ்வெல்லை ஆறு கோடியே 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 2014 ஆம் ஆண்டு ஆர் சி பி அணி யுவராஜ் சிங்கை 14 கோடி ரூபாய்க்கும் 2015 ஆம் ஆண்டு டெல்லி அணி யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தது.
2016 ஆம் ஆண்டு ஆர் சி பி அணி ஷேன் வாட்சனை ஒன்பது கோடியே ஐம்பது லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 2017 ஆம் ஆண்டு பென் ஸ்டோக்ஸ் 14 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும், புனே அணி 2018 ஆம் ஆண்டு 12.5 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தான் அணி பென் ஸ்டோக்சை ஏலத்தில் எடுத்தது. 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான அணி உனாட்கட்டையும், வருண் சக்கரவர்த்திதையும் பஞ்சாப் அணியும் எட்டு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
2020 ஆம் ஆண்டு கேகேஆர் அணி பாட் கம்மின்ஸ் 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் 2021 ஆம் ஆண்டு கிறிஸ் மொரிசை 16 கோடியை 25 லட்சம் ரூபாய்க்கு, ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது. 2022 ஆம் ஆண்டு மும்பை அணி இசான் கிஷனை 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், 2023 ஆம் ஆண்டு ஷாம் கரணை பஞ்சாப் அணி 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தது.
Story first published: Sunday, December 3, 2023, 11:45 [IST]
Other articles published on Dec 3, 2023


Click it and Unblock the Notifications