For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் ஏலம் 2026 LIVE: நிறைவடைந்த மினி ஏலம்.. ரூ. 215.45 கோடி செலவு

அபுதாபி: ஐபிஎல் 2026 மினி ஏலம் அபுதாபியில் நிறைவடைந்தது. இந்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஏலத்தில் மொத்தம் 369 வீரர்கள் போட்டி போட்டனர். மொத்தம் 215.45 கோடி ரூபாய் செலவானது.

IPL auction 2026

Dec 16, 2025, 9:18 pm IST

இந்த மினி ஏலத்தில் 77 இடங்களுக்கான வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.மொத்தம் 215.45 கோடி ரூபாய் செலவானது.

Dec 16, 2025, 9:13 pm IST

2026ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது.

Dec 16, 2025, 9:12 pm IST

கைல் ஜேமிசன் என்ற இளம் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரை டெல்லி அணி ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது.

Dec 16, 2025, 9:11 pm IST

வீஹான் மஹல்ஹோத்ரா என்ற வீரரையும் கனிஷிக் சௌகான் என்ற இரண்டு வீரர்களையும் தலா 30 லட்சத்திற்கு பெங்களூரு அணி வாங்கியது.

Dec 16, 2025, 9:09 pm IST

பிரித்வி ராஜ் என்ற இளம் இந்திய வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது.

Dec 16, 2025, 9:08 pm IST

பெங்களூரு அணி விக்கி ஓஸ்ட்வல் என்ற வீரரை 30 லட்சத்திற்கு வாங்கியது.

Dec 16, 2025, 9:07 pm IST

குல்தீப் சென் என்ற இளம் வேகப்பந்து வீச்சாளரை ராஜஸ் தான் அணி 75 லட்சங்களுக்கு வாங்கியது.

Dec 16, 2025, 9:06 pm IST

ஆடம் மிலன் என்ற நியூசிலாந்து வீரரை ராஜஸ்தான் அணி இரண்டு கோடியே 40 லட்சத்திற்கு வாங்கியது.

Dec 16, 2025, 9:05 pm IST

டாம் பாட்டம் என்ற இளம் வீரரை டைட்டன்ஸ் அணி ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது.

Dec 16, 2025, 9:04 pm IST

ஜாக் ஃபெலூக்ஸ் என்ற இளம் வீரரை சென்னை அணி 75 லட்சங்களுக்கு வாங்கியது.

Dec 16, 2025, 9:02 pm IST

பிரித்வி ஷாவை டெல்லி அணி 75 லட்சங்களுக்கு வாங்கியது.

Dec 16, 2025, 8:41 pm IST

ஜேக் எட்வர்ட்ஸ் என்ற இளம் இந்திய வீரரை அவரின் அடிப்படை விலை 50 லட்சத்தில் இருந்து, ரூபாய் 3 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது. இவரை வாங்க தொடக்கத்தில் இருந்து ஆர்வம் காட்டியது சென்னை.

Dec 16, 2025, 8:38 pm IST

பிரேஜேஷ் சர்மா என்ற இளம் வீரரை அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு ராஜஸ்தான் அணி வாங்கியது.

Dec 16, 2025, 8:36 pm IST

விஷால் நிசாத் என்ற இளம் இந்திய வீரரை ரூபாய் 30 லட்சத்திற்கு அடிப்படை விலையில் பஞ்சாப் அணி வாங்கியது.

Dec 16, 2025, 8:30 pm IST

லுங்கி எங்கிடியை, அவரது அடிப்படை விலை ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி.

Dec 16, 2025, 8:29 pm IST

ஆஸ்திரேலியாவின் ஜோஸ் இங்லிஸை ரூபாய் 8 கோடியே 60 லட்சத்திற்கு வாங்கியது, லக்னோ அணி.

Dec 16, 2025, 8:25 pm IST

ஜோர்டன் ஜாக்ஸ் என்ற வீரரை பெங்களூரு அணி 75 லட்சங்களுக்கு வாங்கியது.

Dec 16, 2025, 8:24 pm IST

பென் துவாரிஷியஸ் என்ற ஆஸ்திரேலிய வீரரை பஞ்சாப் அணி 4.40 கோடிகளுக்கு வாங்கியது.

Dec 16, 2025, 8:18 pm IST

பஞ்சாப் அணியுடன் பெரும் போட்டி போட்டு, ராகுல் சஹாரை ரூபாய் 5 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கியது சென்னை.

Dec 16, 2025, 8:13 pm IST

மேட் ஹென்றியை 2 கோடிக்க்கு வாங்கிய சென்னை, அதேபோல் ஆகாஷ் தீப்பை ரூபாய் ஒரு கோடிக்கு வாங்கியது கொல்கத்தா.

Dec 16, 2025, 8:08 pm IST

லிவிங்ஸ்டனை 13 கோடிக்கு வாங்கிய ஹைதராபாத் அணி. இவரை முதலில் யாரும் ஏலத்தில் இருக்கவில்லை.

Dec 16, 2025, 8:03 pm IST

75 லட்சத்திற்கு சர்ஃப்ராஸ் கானை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

Dec 16, 2025, 7:27 pm IST

தக்‌ஷ் கும்ரா என்ற இளம் வீரரை 30 லட்சத்திற்கு கொல்கத்தா அணி வாங்கியது.

Dec 16, 2025, 7:25 pm IST

கரன்ஸ் ஃபெலூட்டா என்ற விரரை ஹைதராபாத் அணி வாங்கியது. இவரை அடிப்படை விலைக்கே வாங்கியது.

Dec 16, 2025, 7:24 pm IST

பிரக்ஃபுல் ஹின்ஞே என்ற வீரரை அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு வாங்கியது ஹைதராபாத் அணி.

Dec 16, 2025, 7:22 pm IST

அதர்வா அன்குலோகெர் என்ற வீரரை மும்பை அணி அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு வாங்கியது.

Dec 16, 2025, 7:19 pm IST

அமித் குமார் என்ற பந்து வீச்சாளரை ஹைதராபாத் அணி ரூபாய் 30 லட்சத்திற்கு வாங்கி உள்ளது.

Dec 16, 2025, 7:13 pm IST

கூப்பர் கான்லி என்ற ஆஸ்திரேலிய வீரரை பஞ்சாப் அணி வாங்கியுள்ளது.

Dec 16, 2025, 7:09 pm IST

ஹைதராபாத் அணி ஷாகிப் ஹுசைன் என்ற பந்துவீச்சாளரை 30 லட்சத்திற்கு வாங்கியது

Dec 16, 2025, 7:07 pm IST

ரவி சிங் என்ற வீரரை ராஜஸ்தான் அணி 95 லட்சங்களுக்கு வாங்கியது. இவரது அடிப்படை விலை ரூபாய் 30 லட்சம்.

Dec 16, 2025, 7:06 pm IST

சலில் அரோரா என்ற வீரரை ஹைதராபாத் அணி 1.5 கோடிகளுக்கு வாங்கியது. இவரை வாங்க மும்பை அணி 1.4 கோடிகள் வரை முயற்சித்தது.

Dec 16, 2025, 7:04 pm IST

மங்கேஷ் யாதவ் என்ற இளம் ஆல்ரவுண்டரை ரூபாய் 5.20 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது. இவரை வாங்க ஹைதராபாத் அணியும் முயற்சி செய்தது.

Dec 16, 2025, 6:59 pm IST

அமன் கான் என்ற ஆல்ரவுண்டரை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 40 லட்சத்திற்கு வாங்கியது.

Dec 16, 2025, 6:58 pm IST

அக்‌ஷந்த் ரகுவன்சி என்ற இளம் இந்திய வீரரை, அடிப்படை விலை 30 லட்சத்தில் இருந்து, ரூபாய் 2. கோடியே 20 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியது லக்னோ அணி.

Dec 16, 2025, 6:54 pm IST

தினேஷ் மால்வர் என்ற இளம் வீரரை அடிப்படை விலை ரூபாய் 30 லட்சத்திற்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி.

Dec 16, 2025, 6:52 pm IST

முஸ்தபிசூர் ரகுமானை வாங்கிய கொல்கத்தா, அவரது அடிப்படை விலை 2 கோடியில் இருந்து 9.20 கோடி வரை சென்னை அணியுடன் போட்டி போட்டது.

Dec 16, 2025, 6:47 pm IST

நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டிம் சீஃப்ரட்டை கொல்கத்தா அணி இரண்டு கோடிகளுக்கு வாங்கி உள்ளது.

Dec 16, 2025, 6:45 pm IST

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேத்யூ ஷார்ட்டை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவரை ரூபாய் 1.75 கோடிகளுக்கு வாங்கி உள்ளது.

Dec 16, 2025, 6:44 pm IST

ஜேசன் ஹோல்டரை ரூபாய் 7 கோடிக்கு வாங்கிய குஜராத் டைட்டன்ஸ்

Dec 16, 2025, 6:16 pm IST

மாலை 6.20 மணி வரை 2026 ஐபிஎல் ஏலத்தில் இடைவேளை விடப்பட்டுள்ளது. அதன் பின் மீண்டும் ஏலம் துவங்கும்.

Dec 16, 2025, 5:11 pm IST

14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கார்த்திக் சர்மாவை வாங்கிய சிஎஸ்கே

Dec 16, 2025, 5:00 pm IST

ரூ.14.2 கோடிக்கு இளம் வீரர் பிரசாந்த் வீரை வாங்கிய சிஎஸ்கே

Dec 16, 2025, 4:47 pm IST

ஆக்யூப் தார் என்ற இளம் ஆல்ரவுண்டரை ரூபாய் 8.40 கோடிக்கு வாங்கிய டெல்லி.

Dec 16, 2025, 4:14 pm IST

அகில் குசைன் என்ற இளம் வீரரை வாங்கிய சென்னை அணி. இவரை ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது.

Dec 16, 2025, 4:13 pm IST

ரூபாய் 7.20 கோடிகளுக்கு சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாயை வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

Dec 16, 2025, 4:03 pm IST

ஆன்ரிச் நோர்கியாவை 2 கோடிக்கு வாங்கிய லக்னோ அணி. லக்னோ மைதானத்தில் அவரது பவுன்சர்கள் அணிக்கு பலம் சேர்க்கும் என்று ஏற்கனவே கருத்துக்கள் பரவி வந்தது.

Dec 16, 2025, 4:01 pm IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பத்திரனாவை ரூபாய் 18 கோடிகளுக்கு வாங்கி உள்ளது.

Dec 16, 2025, 3:28 pm IST

ஃபின் ஆலனை 2 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா. கொல்கத்தா அணி ஏற்கனவே கேமரூன் கிரீனை 25.20 கோடிகளுக்கு வாங்கியுள்ளது.

Dec 16, 2025, 3:27 pm IST

பென் டக்கெட்டை தட்டித் தூக்கிய டெல்லி கேபிடல்ஸ். பென் டக்கெட்டை ரூபாய் 2 கோடிக்கு வாங்கியது.

Dec 16, 2025, 3:25 pm IST

தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிக்காக்கை ஒரு கோடிக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ். டிக்காக்கை அவரது அடிப்படை விலைக்கே வாங்கியது.

Dec 16, 2025, 3:21 pm IST

வெங்கடேஷ் ஐயரை போட்டி போட்டு 7 கோடிகளுக்கு வாங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

Dec 16, 2025, 3:13 pm IST

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்காவை 2 கோடிக்கு ஏலம் எடுத்த லக்னோ அணி

Dec 16, 2025, 3:05 pm IST

இதற்கு முன்னர் கடந்த 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்ஷெல் ஸ்டார்க் அதிகபட்சமாக 24 கோடியே 75 லட்சத்திற்கு இதே கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.

Dec 16, 2025, 3:00 pm IST

25 கோடிகள் வரை கேமரூன் கிரீனுக்கான போட்டி போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ். அதற்கு முன்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தாவுடன் போட்டி போட்டுக் கொண்டு இருந்தது.

Dec 16, 2025, 2:58 pm IST

கேமரூன் கிரீனை ரூபாய் 25 கோடியே 20 லட்சத்திற்கு வாங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

Dec 16, 2025, 2:45 pm IST

ப்ரித்வி ஷா மற்றும் டெவான் கான்வேவை வாங்க ஆர்வம் காட்டாத அணிகள். இருவரும் விற்கப்படவில்லை.

Dec 16, 2025, 2:43 pm IST

டேவிட் மில்லரை 2 கோடிகளுக்கு வாங்கிய டெல்லி. வேறு யாரும் ஏலம் கேட்காததால், அடிப்படை விலைக்கே வாங்கியது.

Dec 16, 2025, 2:41 pm IST

2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது.

Dec 16, 2025, 1:42 pm IST

ஐபிஎல் ஏலம் நாள் அன்று பட்டையை கிளப்பிய வெங்கடேஷ் ஐயர்

Dec 16, 2025, 1:03 pm IST

இன்ஸ்டாகிராம் மூலம் ஏலத்தில் இடம்பிடித்தவர். யார் இந்த இஷாஸ் சவாரியா

Dec 16, 2025, 11:42 am IST

சிஎஸ்கே அணி சர்பிராஸ் கானை வாங்க வேண்டும் என்று ரெய்னா கோரிக்கை

Dec 16, 2025, 11:16 am IST

சிஎஸ்கே அணியிடம் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் கைவசம் உள்ளது. மினி ஏலத்தில் சிஎஸ்கே 3 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 9 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.

Dec 16, 2025, 11:14 am IST

இந்த மினி ஏலத்தில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் 64 கோடியே 30 லட்சம் ரூபாய் கைவசம் உள்ளது.

Dec 16, 2025, 11:11 am IST

ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் இன்று மதியம் 2:30 மணிக்கு அபுதாபியில் தொடங்குகிறது இந்த மினி எழுத்தில் 77 இடங்களுக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் இந்த ஏலத்தில் மொத்தம் 369 வீரர்கள் போட்டி போட உள்ளனர்.

Story first published: Tuesday, December 16, 2025, 11:10 [IST]
Other articles published on Dec 16, 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+