Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு தவறால் 14 ரன் போச்சு.. சிஎஸ்கே பிடித்த 5 அபார கேட்ச்.. அதுவும் பார்ட்னர்ஷிப் போட்டு அபாரம்

மும்பை : ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிரான போட்டியில் இன்று சிஎஸ்கே விரர்கள் சிறப்பாக கேட்ச் பிடித்தனர். இதே போன்று தோனியின் எச்சரிக்கை அடுத்து இன்று ஒரு முறை கூட சிஎஸ்கே வீரர்கள் நோ பால் வீசவில்லை.

கேட்ச்கள் எப்போதும், போட்டிகளை வென்று கொடுக்கும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இன்று சிஎஸ்கே வீரர்கள் 5 கேட்ச்களை பிடித்தனர். முதலில் இஷான் கிஷன் அடித்த பந்தை பவுண்டரி லைனில் பிரிட்டோரயஸ் கேட்ச் பிடித்தார்.

IPL - CSK 5 Brilliant catches makes a big difference vs MI

இதே போன்று சூர்யகுமார் யாதவும் ஸ்விப் செய்த போது, அதனை தோனி அபாரமாக பிடித்து அவரை ஆட்டமிழக்க செய்தார். இதே போன்று கேமிரான் கீரின் நேராக அடித்த பந்தை, பந்துவீசிய ஜடேஜாவே பிடித்து அசத்தினார்.இதே போன்று அதிரடி வீரர் ஸ்டப்ஸ் அடித்த பந்தை தான் சிஎஸ்கே வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிடித்தனர். ஸ்டப்ஸ் அடித்த பந்தை பவுண்டரி லைனில் பிரிட்டோரியஸ் பிடித்தார். ஆனால், சிக்சர் லைனில் காலை வைத்துவிடுவோம் என நினைத்து, அதனை தூக்கிப் போட, அதனை ருதுராஜ் கெய்கவாட் பிடித்தார்.

இதே போன்று டிம் டேவிட் அடித்த பந்தை ஓடி வந்து கேட்ச் பிடிக்கும் போது, அதனை பிடிக்க முடியாமல் தவறவிட்டார். அதன் பிறகு கிரீன் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார். அதன் பிறகு மீண்டும் ரஹானேவின் அபார கேட்ச்ல் அவரும் ஆட்டமிழந்தார். ருதுராஜின் கேட்சின் கஷ்டம் இருந்தாலும், அதனை பிடித்திருந்தால், ஒரு 14 ரன்கள் சிஎஸ்கேக்கு மிச்சம் ஆகி இருக்கும்.

Story first published: Saturday, April 8, 2023, 21:57 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+