இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி – சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை மோதல்

இந்தியாவுக்காக டெண்டுல்கர் முதல் போட்டியில மோதியபோது டோணிக்கு 8 வயதாம். இன்று இருவரும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள். கடந்த ஆறு ஆண்டுகளாக இருவரும் இணைந்து இந்தியாவின் வெற்றிக்குப் பாடுபட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று இரவு இருவரும் எதிரெதிர் அணிகளின் கேப்டன்களாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் சந்திக்கின்றனர். இருவருமே வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து விளையாடுபவர்கள். தத்தமது பொறுப்புகளில் சாதித்துக் காட்டியவர்கள். எனவே இந்த இரு கேப்டன்களில் யாருடைய தலைமையிலான அணிக்கு வெற்றி கிட்டப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஆரம்பத்திலிருந்தே மும்பை அதிரடியாக ஆடி வருகிறது. அதேசமயம், சென்னை அணி வெற்றியையும், தோல்வியையும் கிட்டத்தட்ட சம அளவில் வைத்துள்ளது. அரை இறுதிப் போட்டியில் கடுமையாகப் போராடி இறுதிக்கு வந்துள்ளது சென்னை.
ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சென்னை வந்திருப்பது இது 2வது முறையாகும்.
சென்னை அணியின் பேட்டிங் தூண்களாக முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பத்ரிநாத் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ஆர்.அஷ்வின், முரளிதரன், போலிங்கர், ஜகதி ஆகியோர் உள்ளனர். இவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்த டோணி இருக்கிறார்.
மும்பையும் எந்த வகையிலும் சளைத்ததாக இல்லை. பேட்டிங்கில் டெண்டுல்கர், அம்பட்டி ராயுடு, ஷிகார் தவான், செளரப் திவாரி, போலார்ட் ஆகியோர் வலுவாக உள்ளனர். பந்து வீச்சிலும் போலார்ட் அசத்துகிறார். கூடவே ஜாகிர்காந், தில்ஹாரா பெர்னாண்டோ, மலிங்கா ஆகியோர் உள்ளனர்.
இப்படி இரு அணிகளும் சம பலத்தில் இருப்பதால் ரசிகர்களுக்கு நல்ல வேட்டை காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இரண்டில் எந்த அணி வென்றாலும் அது அந்த அணிக்கு முதல் பட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications