Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷேன் வாட்சன் மீண்டும் சதம்.... ஹைதராபாத்தை வீழ்த்தியது.... சிஎஸ்கே மீண்டும் சாம்பியன்!

Recommended Video

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச முடிவு

மும்பை: ஐபிஎல் சீசன் 11ன் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றது. மும்பையில் நடந்த பைனல்ஸில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, கேப்டன் கூல் தோனியின் அணி மீண்டும் கோப்பையை வென்றுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கியது. மொத்தம், 51 நாட்கள், 8 அணிகள், 60 ஆட்டங்கள் என, இந்த சீசன் துவக்கம் முதலே களைகட்டியது.

லீக் சுற்றில் 56 ஆட்டங்கள் முடிந்த நிலையில், பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச் சுற்றில் ஹைதராபாத்தை வென்று சிஎஸ்கே நேரடியாக பைனல்ஸ் நுழைந்தது. எலிமினேட்டரில் ராஜஸ்தானை வென்ற கொல்கத்தாவை, 2-வது தகுதிச் சுற்றில் வென்று ஹைதராபாத் பைனல்ஸ் முன்னேறியது.

இந்த சீசனையும் சேர்த்து, தான் விளையாடிய 9 சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே, 7வது முறையாக பைனல்ஸ் முன்னேறி அசத்தியுள்ளது. மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லத் தயாராக உள்ளது. அதே நேரத்தில் ஹைதராபாத் அணிக்கு இது இரண்டாவது பைனல்ஸ். 2016ல் சாம்பியன் பட்டத்தை வென்றது.

வலுவான அணிகள்

வலுவான அணிகள்

இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே, சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மிகவும் வலுவான பேட்டிங் வரிசையை சிஎஸ்கே கொண்டுள்ளது. பந்துவீச்சிலும் அசத்தி வருகிறது. அதேபோல் மிகவும் வலுவான பவுலிங்கை கொண்டுள்ள ஹைதராபாத். பேட்டிங்கிலும் மிரட்டி வருகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளன.

சிஎஸ்கேவுக்கு சாதகம்

சிஎஸ்கேவுக்கு சாதகம்

இந்த சீசனில், லீக் சுற்றில் நடந்த இரண்டு ஆட்டங்கள் மற்றும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில், ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வென்றுள்ளது. நான்காவது முறையாக பைனல்ஸில் இரு அணிகளும் மோதின. இதுவரை இரு அணிகளும் 9 முறை மோதியுள்ளன. அதில் 7ல் சிஎஸ்கே வென்றுள்ளது. புள்ளி விபரங்கள் சிஎஸ்கேவுக்கே சாதகமாக உள்ளனது.

பேட்டிங்

பேட்டிங்

மும்பையில் நடக்கும் பைனல்ஸில் டாஸை வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு செய்தது. பேட்டிங் துவக்கிய ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 5, ஷிகார் தவான் 26, வில்லியம்சன் 47, ஷகிப் அல் ஹசன் 23, தீபக் ஹூடா 3, கார்லோஸ் பிராத்வொயிட் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் எடுத்தார்.

நிரூபித்தது சிஎஸ்கே

நிரூபித்தது சிஎஸ்கே

179 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சிஎஸ்கே, 18.3 ஓவர்களிளல் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஷேன் வாட்சன் சீசனின் இரண்டாவது சதம் அடிக்க, சிஎஸ்கே மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. டுபிளாசி 10, ரெய்னா, 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வாட்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 117 ரன்கள் எடுத்தார். அம்பதி ராயாடு, 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கேப்டன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே, 7 முறை பைனல்ஸ் நுழைந்து, மூன்றாவது முறையாக சாம்பியனாகி உள்ளது.

Story first published: Monday, May 28, 2018, 0:18 [IST]
Other articles published on May 28, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+