மும்பை : ஐபிஎல் தொடரில் 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிராக ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக விளையாடிய 10 ஆட்டத்தில் தற்போது தான் 3வது முறையாக டாஸ் வென்றுள்ளார்.
இரு அணிகளும், 32 முறை ஐபிஎல் போட்டியில் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 17 முறையும், டெல்லி அணி 15 முறையும் வென்று இருக்கிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 31 டி20 போட்டியில் 23 முறை 2வதாக பேட்டிங் செய்த அணியே வென்று இருக்கிறது.

இதனால், மும்பை அணிக்கு இன்றைய டாஸ் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, கடந்த 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்து சரியாக விளையாடவில்லை என்றால், இம்முறை பந்துவீசுவதாக காமெடியாக பதில் சொன்னார். மேலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால், முதலில் பந்துவீசுவதாக கூறினார்.
இன்றைய ஆட்டத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் இன்று ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று ரெய்லி மெர்டித் அணிக்கு திரும்ப, ஸ்டப்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அணியை பொறுத்தவரை அண்டர் 19 கேப்டன் யாஷ் துல் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று ரூசோவ்க்கு பதிலாக முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணிக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளும் இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாததால், இன்றைய ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.