For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அக்சர் பட்டேல் அடித்த பந்து.. சூர்யகுமார் தலையை பதம் பார்த்தது..கேட்ச் பிடிக்கும் போது நிகழ்ந்த தவறு

டெல்லி : ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் ஃபில்டிங் செய்யும் போதுதலையில் பந்து பட்டு காயமடைந்தார். சூர்யகுமார் யாதவ்க்கு நடப்பு ஆண்டு வர வர மோசமாக சென்று கொண்டு வருகிறது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்தார். ஆனால், அதன் பிறகு அவருக்கு போதாத காலமாக மாறிவிட்டது. டெஸ்ட் போட்டியில் விளையாட இடம் கிடைத்தும், அதில் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

IPL - MI vs DC - suryakumar injured his head during fielding

இதே போன்று இந்திய ஒருநாள் அணியிலும் அவர் இடம் கிடைத்தது. அந்த வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் தொடர்ந்து 3 முறை கோல்டன் டக் ஆனார்

சரி, ஐபிஎல் தொடரிலாவது சூர்யகுமார் தனது பழைய பார்மை மீட்பார் என்று பார்த்தால் அதுவும் ஏமாற்றம் தான். ஆர்சிபிக்கு எதிராக 15 ரன்களும், சிஎஸ்கேக்கு எதிராக ஒரு ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூர்யகுமார் பவுண்டரி லைனில் ஃபில்டிங் நின்றார்.

அப்போது அக்சர் பட்டேல் அடித்த பந்தை பிடிக்க மயன்ற போது, அதனை தவறாக கணிக்க, அது அவரது கண் இமைக்கு மேல் நெத்தியில் பட்டு, பந்து சிக்சருக்கு சென்றது. இதனால் வலியால் துடித்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ஃபில்டிங்கிலிருந்து சூர்யகுமார் விலகினார்.

Story first published: Tuesday, April 11, 2023, 22:24 [IST]
Other articles published on Apr 11, 2023
English summary
IPL - MI vs DC - suryakumar injured his head during fielding
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+