Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

24 மணி நேர கெடு.. ஆனா நீங்க பார்க்க முடியாது.. டெக்னாலஜி பிரச்சனையில் சிக்கிய 4 ஐபிஎல் டீம்.. ஷாக்

சென்னை: ஐபிஎல் ஏலம் நாளை நடக்க உள்ள நிலையில் 4 ஐபிஎல் அணிகள் முக்கியமான பிரச்சனை ஒன்றில் சிக்கி இருக்கிறது.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நாளை நடக்க உள்ளது. சென்னையில் மினி ஏலமாக இந்த ஏலம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

மொத்தம் 8 அணிகள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளனர். 230 வீரர்கள் வரை இதில் ஏலம் விடப்பட வாய்ப்புகள் உள்ளது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் நான்கு ஐபிஎல் அணிகள் தங்கள் வீரர்களை எப்படி தேர்வு செய்யும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இந்த ஏலத்தில் ராஜஸ்தான் அணி, டெல்லி அணி இரண்டும் எளிதாக வீரர்களை எடுக்கும். இரண்டு அணியின் கேப்டனும் தற்போது பிசியாக இல்லை என்பதால் அவர்கள் ஏலத்தில் கவனம் செலுத்த முடியும்.

வேறு

வேறு

அதேபோல் இன்னொரு பக்கம் கொல்கத்தா அணியில் கேப்டன் இயான் மோர்கன் இங்கிலாந்தில் இருந்தாலும், முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் ஏலத்தின் போது உதவி செய்வார் என்று கூறப்படுகிறது. இயான் மோர்கனுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் முக்கிய முடிவுகளை எடுப்பார்.

ஆனால்

ஆனால்

அதேபோல் ஹைதராபாத் அணியிலும் வார்னர் இணையம் மூலம் தொடர்பில் இருப்பார். அந்த அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்கிறார்கள். ஆனால் பெங்களூர், சென்னை, மும்பை, பஞ்சாப் அணிகளுக்குதான் சிக்கல். இந்த நான்கு அணிகளும் நிறைய வீரர்களை வெளியே அனுப்பி உள்ளது.

சிக்கல்

சிக்கல்

அதிலும் பஞ்சாப் அணி எல்லாம் மொத்தமாக அணியை மாற்றும் நிலையில் இருக்கிறது. புதிதாக பல வீரர்களை கொண்டுவர வேண்டும். ஆனால் இந்த அணி கேப்டன்கள் ரோஹித், கோலி, ராகுல் ஆகியோர் தங்கள் அணி நிர்வாகிகளை நேரில் சந்திக்க முடியாது. மீட்டிங் போட முடியாது.

மீட்டிங்

மீட்டிங்

இந்த வீரர்களை சந்திக்க ஐபிஎல் அணி நிர்வாகிகள் வைத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி இந்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்கவில்லை. இதனால் இவர்கள் போன் மூலம் மட்டுமே பேச முடியும். கிரிக்கெட் பயிற்சியில் இருப்பதால் இவர்கள் இதில் கவனம் செலுத்தவும் முடியாது.

மாற்றம்

மாற்றம்

அதேபோல் சிஎஸ்கே அணியிலும் கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் சென்னைக்கு வரவில்லை. இதனால் சிஎஸ்கே சிஇஓ காசி விசுவநாதன் மட்டுமே ஏலம் எடுக்க வருவார். இவர்கள் எல்லோரும் போனில் மட்டுமே தொடர்பில் இருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

டெக்னாலஜி

டெக்னாலஜி

இதனால் இந்த நான்கு அணிகளும் டெக்லானாஜியை நம்பி மட்டுமே இருக்கிறது. போன் மூலம் மட்டுமே இந்த அணிகளின் கேப்டன்கள் தங்கள் வீரர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதனால் உடனுக்குடன் முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்படும். அணியின் மூத்த நிர்வாகிகள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Story first published: Wednesday, February 17, 2021, 17:04 [IST]
Other articles published on Feb 17, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+