Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் பதவி காலி.. இப்போது கோச்சையும் தூக்கி அடித்த ஐபிஎல் அணி.. அடுத்தடுத்த அதிரடி முடிவு.. பரபர!

சென்னை: 2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டு உள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் 2021 தொடருக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொடருக்கான மினி ஏலம் 3 நாட்களுக்கு முன்பு நடந்தது.

இந்த நிலையில் மினி ஏலத்திற்கு பின்பாக ஒவ்வொரு அணியும் புதுப்பொலிவோடு மாறியுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் சீசனில் எதிர்பார்க்காத திருப்பங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

எப்படி

எப்படி

2021 ஐபிஎல் தொடரை முன்னிட்டு ராஜஸ்தான் அணியில் வரிசையாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். ஸ்மித் தற்போது எல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார்.

மாற்றம்

மாற்றம்

அதோடு ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமித்து இருக்கிறது. இன்னொரு பக்கம் அணியின் இயக்குனராக குமார் சங்ககரா நியமிக்கப்பட்டு இருக்கிறார். இப்படி ராஜஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் நடந்து வரும் நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் நீக்கப்பட்டு உள்ளனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

அதன்படி ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்ட் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய பயிற்சியாளராக இங்கிலாந்து மற்றும் ஜிம்பாபே அணிகளுக்கு ஆடிய டிரெவர் பென்னி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். ராஜஸ்தான் அணி இதனால் மொத்தமாக மாறியுள்ளது.

மாற்றம்

மாற்றம்

ராஜஸ்தான் அணியில் இங்கிலாந்து வீரர்கள் பலர் உள்ள நிலையில் இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. டிரெவர் பென்னி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருந்தார் சங்கக்காராதான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று கூறப்படுகிறது.

Story first published: Monday, February 22, 2021, 12:42 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+