Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் பிளேயிங் லெவன்.. வேற யாருக்கும் இடம் கிடையாது.. உறுதியாக நிற்கும் தோனி.. தமிழருக்கு லக்!

சென்னை: ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணி முதல் 8 போட்டிகளில் ஒரே பிளேயிங் லெவன் வீரர்களை மட்டுமே பயன்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

2021 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ளது. ஏப்ரல் முதல் வாரமே இந்த கிரிக்கெட் தொடர் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான மினி ஏலம் நடந்து முடிந்துவிட்டது. 6 வீரர்களை ரிலீஸ் செய்துவிட்டு, 6 புதிய வீரர்களை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்து இருக்கிறது.

உத்தப்பா

உத்தப்பா

ஏலத்தில் எடுக்கப்பட்ட 6 வீரர்கள் போக கூடுதலாக ஏழாவது வீரராக ராபின் உத்தப்பாவும் டிரேடிங் முறையையில் எடுக்கப்பட்டு இருக்கிறார். இதனால் சிஎஸ்கே அணி மிகவும் வலிமையான அணியாக இருக்கிறது. இந்த நிலையில் ஐபிஎல் 2021 தொடரில் சிஎஸ்கே அணி முதல் 8 போட்டிகளில் ஒரே பிளேயிங் லெவன் வீரர்களை மட்டுமே பயன்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

எப்படி

எப்படி

பெரும்பாலும் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது என்று கூறுகிறார்கள்.இந்த முறையும் அணியில் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். ஓப்பனிங் வீரர்களாக ரூத்துராஜ், டு பிளசிஸ் இருவரும் ஆடுவார்கள். முதலில் சில போட்டிகளில் டு பிளசிஸ் ஆட மாட்டார் என்பதால் ராபின் உத்தப்பா ஓப்பனிங் இறங்குவார் என்கிறார்கள்.

ஓப்பனிங்

ஓப்பனிங்

அதன்படி ரூத்துராஜ், டு பிளசிஸ்/ராபின் உத்தப்பா, ரெய்னா, அம்பதி ராயுடு, தோனி, சாம் கரன், ஜடேஜா, பிராவோ, மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம் சாகர் ஆகியோர் சிஎஸ்கேவில் ஆட வாய்ப்புள்ளது. பிராவோவிற்கு பதிலாக சில போட்டிகளில் லுங்கி நிகிடி ஆட வாய்ப்புள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

இதுபோக தமிழக வீரர் சாய் கிஷோருக்கு அவ்வப்போது கிருஷ்ணப்பா கவுதமிற்கு பதிலாக ஆட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கவுதமின் பேட்டிங் மற்றும் ஸ்பின் காரணமாகவும், சாய் கிஷோர் சிறப்பாக பவுலிங் செய்து வருவதாலும் இரண்டு பேருக்கும் ஒரு சில போட்டிகளில் மாறி மாறி வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, February 24, 2021, 22:20 [IST]
Other articles published on Feb 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+