Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனசே சரியில்லை.. ஏதோ தப்பா இருக்கு.. ரோஹித் சர்மாவிற்கு அதிர்ச்சி அளித்த மூத்த வீரர்.. என்ன ஆகுமோ?

மும்பை: மும்பை அணியின் மூத்த வீரர் டி காக் தற்போது மன அழுத்தத்தில் கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2020 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது மும்பை அணி. இந்த நிலையில் இதே வேகத்தோடு 2021 ஐபிஎல் தொடருக்கும் மும்பை அணி தயாராகி வருகிறது.

ஏலத்தில் ஒரு சில வீரர்களை எடுத்து மும்பை அணி தங்களை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது. மும்பை வீரர்களும் தற்போது முதல் தரப்போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் மும்பை அணியின் மூத்த வீரர் டி காக் தற்போது மன அழுத்தத்தில் கஷ்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கும் இவர் மன ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறார். அதீத மன அழுத்தத்தில் கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்திய அணி

இந்திய அணி

இதனால் இன்னும் சில நாட்களுக்கு இவர் கிரிக்கெட் ஆட மாட்டார் என்கிறார்கள் . தென்னாப்பிரிக்காவில் நடக்க உள்ள முதல் தர போட்டிகளில் இவர் ஆட வேண்டாம் என்ற முடிவை டி காக் எடுத்துள்ளார். கொரோனா காரணமாக பல்வேறு தொடர்களில் இவர் பயோ பபுளில் இருந்தார் .

மாற்றம்

மாற்றம்

இதன் காரணமாக இவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது தற்காலிக ஓய்வை டி காக் அறிவித்துள்ளார். இவரின் இந்த முடிவு காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறது. இவர் ஐபிஎல் ஆடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது .

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

ஐபிஎல் தொடரில் இதேபோல் அவர் ஓய்வு எடுத்தால் அது மும்பை அணிக்கு சிக்கல் ஆகும். கடந்த சீசனில் மும்பை அணிக்கு இவர் மேட்ச் வின்னராக இருந்தார். இந்த நிலையில் இந்த சீசனில் இவர் ஆடுவதே சந்தேகமான விஷயமாக மாறியுள்ளது.

Story first published: Monday, February 22, 2021, 13:37 [IST]
Other articles published on Feb 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+