இப்படி எல்லாம் நடக்கும் என்று கனவு கூட காண வேண்டாம்.. தோனி கொடுத்த அழுத்தம்.. சிஎஸ்கே பகீர் பிளானிங்

சென்னை: சிஎஸ்கேவில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வீரர்களால் இந்த முறையும் அணிக்குள் இளம் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள்.

2021 ஐபிஎல் ஏலம் முடிந்துள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரம் இந்த தொடர் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே அணி புதிய வீரர்கள் 6 பேரை எடுத்து புதிய பொலிவு பெற்றுள்ளது. ஆப் ஸ்பின் பவுலர்கள் மீது சிஎஸ்கே அணி குறி வைத்துள்ளது .

வீரர்கள்

வீரர்கள்

சிஎஸ்கேவில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வீரர்களால் இந்த முறையும் அணிக்குள் இளம் வீரர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்கிறார்கள். சிஎஸ்கே ரசிகர்களின் மனதை கவர்ந்த முக்கிய வீரர் ஒருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது. தற்போது அணிக்குள் மொயின் அலி, கவுதம் ஆகியோர் வந்துள்ளனர்.

வாய்ப்பு

வாய்ப்பு

இரண்டு பேருமே நல்ல ஆப் ஸ்பின் பவுலர்கள். இதனால் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று தீவிரமாக முயன்று வரும் சாய் கிஷோருக்கு வாய்ப்பு பறிபோகலாம். அதேபோல் இன்னொரு பக்கம் மொயின் அலி வருகையால் ஜெகதீசன் மிடில் ஆர்டரில் இறங்க முடியாத நிலை ஏற்படும்.

 மூத்த வீரர்கள்

மூத்த வீரர்கள்

மேலும் ராபின் உத்தப்பா அணிக்குள் வந்துள்ளார். அவர் நல்ல பார்மிலும் இருக்கிறார். இதனால் ரூத்துராஜ் ஓப்பனிங் இறங்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என்கிறார்கள். பிராவோ காரணமாக லுங்கி நிகிடியும் வாய்ப்பை இழப்பார் என்று கூறப்படுகிறது.

தோனி சிஎஸ்கே

தோனி சிஎஸ்கே

இதன் காரணமாக இந்த வருடமும் சிஎஸ்கே கேப்டன் தோனி இளம் வீரர்களை விட மூத்த வீரர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த வருடமும் பல இளம் வீரர்கள் ஏமாற்றம் அடைய வாய்ப்புள்ளது. ஜெகதீசன், ஹரி நிஷாந்த், ரூத்துராஜ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL Mini Auction 2021: Young players may not get a chance this year also due to seniors good form.
Story first published: Wednesday, February 24, 2021, 13:21 [IST]
Other articles published on Feb 24, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X