Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Points table - வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்.. குஜராத், பஞ்சாப்க்கும் ஆப்பு வைத்த சன்ரைசர்ஸ்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் லக்னோ அணிக்கு எதிரான 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றார்.

அது மும்பை, குஜராத், பஞ்சாப் போன்ற அணிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

IPL points table 2024- Mumbai indians is Knocked out and Gujarat and Punjab is also in danger

இதனை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் எல்லாம் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எட்டி புதிய உலக சாதனையை படைத்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது அந்த அணி 12 போட்டிகளில் விளையாடி ஏழு வெற்றி ,ஐந்து தோல்வி என 14 புள்ளிகள் உடன் ரன் ரேட் 0.40 என்ற அளவில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள்.

இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி தற்போது நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. சிஎஸ்கே அணி 11 போட்டிகளில் விளையாடி ஆறு வெற்றி, ஐந்து தோல்வி என 12 புள்ளிகள் மற்றும் ரன் ரேட் 0.70 என்ற அளவில் இருக்கிறது. ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதன் மூலம் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கனவு பறிப்போகி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி நான்கு வெற்றி, எட்டு தோல்வி என எட்டு புள்ளிகள் மற்றும் ரன் ரேட் மைனஸ் 0.21 என்ற அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். இனி அவர்கள் எஞ்சிருக்கும் இரண்டு போட்டிகளில் வென்றாலும் அதிகபட்சமாக அவர்களால் 12 புள்ளிகளையே பெற முடியும். ஏற்கனவே சிஎஸ்கே, டெல்லி, லக்னோ 12 புள்ளிகளில் இருப்பதால் மும்பை அணி வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இதே போல் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு வெல்ல வேண்டும் என்றால் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகள் தோற்றால் மட்டுமே அவர்களால் பிளே ஆப் க்கு தகுதி பெற முடியும். இது போன்ற ஆர்சிபி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யார் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் தொடர்ந்து வெளியேறிவிடலாம்.

Story first published: Wednesday, May 8, 2024, 23:11 [IST]
Other articles published on May 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+