Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செப்.19ல் ஐபிஎல்.. உலகக் கோப்பை டி20 என்னாச்சு? - ஒரு தகவலும் காணோமே!

மும்பை: ஐபிஎல் மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், உலகக் கோப்பை டி20 தொடரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

ஒருவழியாக, கிரிக்கெட் ரசிகர்களுக்கு எனர்ஜியான செய்தி கிடைத்துள்ளது. ஆம்! 31 ஆட்டங்கள் மீதம் வைத்து நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

 double headers போட்டிகள்

double headers போட்டிகள்

இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படுமாம். அதேபோல் 7 single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

 முடிவு என்னாச்சு?

முடிவு என்னாச்சு?

ஐபிஎல் மீண்டும் தொடங்குவது எல்லாம் ஓகே. அப்போ உலகக் கோப்பை டி20? கடந்த ஆண்டே நடைபெறவேண்டிய டி20 தொடர், கொரோனா காரணமாக, இந்தாண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது, மீண்டும் இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கொத்து கொத்தாக மக்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்க, அமீரகத்தில் தொடரை நடத்தலாம் என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகின.

 ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

அதுவும், இந்தியா - இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு, அமீரகத்தில் செப்டம்பர் மாதம் உலகக் கோப்பையை நடத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது வரை அதுகுறித்து எந்தவித அப்டேட்டும் இல்லை. சில செய்தி அறிக்கையில், இங்கிலாந்து தொடர் முடிந்த பிறகு, உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து அப்படியே அமீரகத்தில் ஐபிஎல் தொடரையும் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. இதற்கு காரணம், உலகக் கோப்பையில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு வீரர்களில் முடிந்த அளவு சில வீரர்களை ஐபிஎல் தொடருக்கு தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

 உலகக் கோப்பை முக்கியம்

உலகக் கோப்பை முக்கியம்

ஆனால், இப்போது செப்டம்பர்.19ம் தேதி ஐபிஎல் தொடங்கும் என கூறப்பட்டுள்ள நிலையில், உலகக் கோப்பை குறித்து எந்த அப்டேட்டும் இல்லை. இதனால், ஐபிஎல்லுக்கு முன்பு உலகக் கோப்பை நடத்த வாய்ப்பில்லை என்று உறுதியாகிவிட்ட நிலையில், அதற்கு பிறகாவது நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், சமூக தளங்களில், நமக்கு ஐபிஎல் எவ்வளவு முக்கியமோ, அதைவிட உலகக் கோப்பை டி20 தொடர் முக்கியம். ஐபிஎல்லுக்காக அதை ஒத்தி வச்சிடாதீங்க.. முதல்ல அதுக்கு அப்டேட் கொடுங்க" என்று ரசிகர்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, May 25, 2021, 21:14 [IST]
Other articles published on May 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+