Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL Retention - மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைக்கப்போகும் வீரர்கள் யார்? வெளியேற போவது யார்?

மும்பை : ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். எந்தெந்த வீரர்களை விடுவிக்கலாம் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே கேப்டன் பதவியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பெரிய பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தற்போது தான் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக சக வீரர்களும் ரசிகர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

ipl 2025 ipl retention cricket mumbai indians rohit sharma

இந்த சூழலில் சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூரிய குமாரை மாற்ற மும்பை அணி நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியா அணியை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதேபோன்று மும்பை அணியில் இருக்கும் ரோகித் சர்மாவும் வெளியேற நினைப்பதாகவும் தெரிகிறது. இதனால் அந்த அணிகள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் ஏழு வீரர்களை தக்க வைக்கும் முடிவு இருந்தால் மும்பை அணி யார் யாரை தேர்வு செய்யும் என்பதை தற்போது பார்க்கலாம். ஹர்திக் பாண்டியா அணியை விட்டு போகிறேன் என்று சொன்னாலும் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை மேலும் ஒரு சீசனுக்கு தொடர வாய்ப்பு வழங்கும் என தெரிகிறது.

இதனால் ஹர்திக் பாண்டியா முதல் தேர்வாக இருப்பார். இதேபோன்று இரண்டாவது தேர்வாக இந்திய டி20 அணியின் கேப்டன், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரருமான சூரியகுமார் யாதவும் செயல்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. மூன்றாவது வீரராக இந்திய அணி நட்சத்திர சூப்பர் ஸ்டார் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர கூடும்.

நான்காவது வீரராக ரோகித் சர்மாவை தக்க வைக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவு செய்யும். ஆனால் ரோகித் சர்மா நான்காவது வீரராக செல்ல விரும்ப மாட்டார். இதனால் அவர் அணியை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திர வீரர் இசான் கிஷன் தக்கவைக்கும் பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார்.

இதேபோன்று திலக் வர்மா மற்றும் தென்னாப்பிரிக்கா வீரர் திவால்ட் பிரேவிஸ் ஆகியோர் மும்பை அணியில் இடம்பெறக்கூடும். மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்களை விட உள்நாட்டு வீரர்கள் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இல்லை குறைந்தபட்சம் இரண்டு வெளிநாட்டு வீரர்களையாவது எடுக்க வேண்டும் என நினைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்ட் கோயிட்சே மற்றும் டிம் டேவிட் அல்லது டிவால்ட் பிரவீஸை தக்க வைக்கும்.

Story first published: Monday, August 19, 2024, 13:18 [IST]
Other articles published on Aug 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+