Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

20-3 என தடுமாறிய கேகேஆர்.. வெறி ஆட்டம் ஆடிய நிதிஷ் ரானா.. பயத்தை காட்டிய ரிங்கு சிங்.. வேற லெவல்

கொல்கத்தா : ஐபிஎல் 16வது சீசனில் தொடர்ந்து 7வது ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் முடிந்துவிட்டது. ஹைதராபாத், கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டத்தில் 400 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டு, ரசிகர்களுக்கு ஃபுல் விருந்தாக அமைந்துள்ளது. இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புருக் 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இதேபோன்று கேப்டன் ஏய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 50 ரன்களும், அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 32 ரன்களும் தென்னாப்பிரிக்கா வீரர் ஹென்ரிச் கிளாசன் 6 பந்துகளின் 16 ரன்களும் விளாசினார். இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 228 ரண்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

 IPL - Run fest in kolkatta as SRH beat KKR by 23 runs

இதனை அடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் குர்பாஸ் டக் அவுட் ஆக, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதேபோன்று சுனில் நரேன், முன்வரிசையில் களம் இறக்கப்பட்டார்.

ஆனால் அவரும் கோல்டன் டக்கானார். இதனால் கொல்கத்தா அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து, பவர் பிளேவின் கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சை சிதறடித்தார். இந்த ஓவரில் மட்டும் நான்கு பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடித்து 28 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் பவர்பிளேவில் கொல்கத்தா அணி 62 ரன்கள் சேர்த்தது.

 IPL - Run fest in kolkatta as SRH beat KKR by 23 runs

காயத்தால் அவதிப்பட்ட ஆண்டிரு ரஸில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்க தனி ஆளாக போராடிய நிதிஷ் ரானா 41 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 3 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் ஹீரோ ரிங்கு சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் களத்தில் இருந்தனர். இதில் புவனேஸ்வர் குமார் ஓவரில் 10 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. இதனையடுத்து கடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது நடராஜன் அபாரமாக பந்துவீசினார்.

எனினும் அதில் ரிங்கு சிங் சிக்சர் அடித்தார். இதனால் அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதனையடுத்து கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. இதில் முதல் பந்திலேயே சர்துல் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் ரிங்கு சிங் 1 சிக்சர் மட்டுமே அடிக்க முடித்தது. இதனால் ஐதராபாத் அணி 23 ரன்கள் வித்தயாசத்தில் வென்றது.

Story first published: Friday, April 14, 2023, 23:31 [IST]
Other articles published on Apr 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+