For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எல்லாத்தையும் பன்னியாச்சு.. ஆனா அது நடக்கல.. ராஜஸ்தான் அணி தோல்வி குறித்து சஞ்சு சாம்சன் விரக்தி!

மும்பை: முதல் போட்டியில் தான் சதமடித்தும் ராஜஸ்தான் வெற்றி பெறாதது குறித்து அந்த அணி கேப்டன் சஞ்சு சாம்சன் விரக்தியடைந்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் நேற்று ராஜஸ்தான் - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக தனி ஆளாக போராடிய கேப்டன் சஞ்சு சாம்சனின் சதம் வீணானது.

ஆட்டம்

ஆட்டம்

போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஜஸ்தான் அணி நூலிழையில் தோற்றது.

திணறல்

திணறல்

222 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பென் ஸ்டோக்ஸ்(0), மன்னன் வோஹ்ரா (12) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதன் பின்னர் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டார். எனினும் அவருக்கு நான் ஸ்ட்ரைக் எண்டில் இருந்த பட்லர் ஷிவம் தூபே, ரியான் பராக், ராகுல் தேவட்டியா ஆகியோர் கைக்கொடுக்கவில்லை.

தனி ஒருவன்

தனி ஒருவன்

அணி வீரர்கள் சரிந்தாலும் ஒற்றை ஆளாக போராடிய சஞ்சு 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடங்கும்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 13 ரன்கள் எடுக்கவிருந்தது. இதில் முதல் 5 பந்துகளில் 8 ரன்களை சாம்சன் எடுத்தார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி பந்தை தூக்கி அடித்து சாம்சன் கேட்ச்சானதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.

விரக்தி

விரக்தி

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசியுள்ள் சாம்சன், எனக்கு சொல்வதற்கு எந்த வார்த்தையும் இல்லை. மிக க்ளோஸ் கேம், ஆனால் துரதிஷ்டவசமாக தோல்வியடைந்தோம். என்னால் முடிந்த எல்லாவற்றையும் நான் செய்தேன். ஆனால் ஃபீட்டர் கையில் பந்து சிக்கியது. இது அனைத்தும் போட்டியில் சகஜம்.

மற்றபடி அணியின் வீரர்களை பொறுத்தவரை அனைவரும் சிறப்பாக விளையாடினர்.

மற்றபடி அணியின் வீரர்களை பொறுத்தவரை அனைவரும் சிறப்பாக விளையாடினர். மற்றபடி அணியின் வீரர்களை பொறுத்தவரை அனைவரும் சிறப்பாக விளையாடினர்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

எனது ஆட்டத்தின் 2ம் பகுதிதான் என் வாழ்நாளில் சிறந்த ஆட்டமாகும். இதற்காக பந்துவீச்சாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். முதல் பாதியில் நான் சிங்கில் மட்டுமே அடித்து களத்தில் செட்டாகி வந்தேன். 2வது பாதியில் என்னுடைய இயல்பான ஆட்டத்திற்கு திரும்பினேன். ஆட்டத்தின் மீதான நம்பிக்கையே சிறப்பான ஆட்டத்தை கொடுத்தது என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 13, 2021, 18:14 [IST]
Other articles published on Apr 13, 2021
English summary
Sanju Samson's Explanation After RR Loses To PBKS By 4 Runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+