Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் இடம்பெறும் அதிரடி வீரர் ரிங்கு சிங்.. புஜாரா, உமேஷ் குறித்து தேர்வுக்குழு விளக்கம்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி இளம் வீரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரிங்கு சிங் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

தனி ஆளாக நின்று ரிங்கு சிங் விளையாடிய விதத்தை பார்க்கும் போது சுரேஷ் ரெய்னாவை ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் பலரும் பாராட்டி இருந்தனர்.

IPL Star batsman Rinku singh might be selected for WI t20 series

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட் ,3 ஒரு நாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. t20 போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதில் முற்றிலும் இளம் வீரர்கள் தான் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி, ரோகித் சர்மா டி20 தொடரில் இடம் பெற மாட்டார்கள் என தெரிகிறது. இதேபோன்று இந்த தொடரில் அதிரடி வீரர் திலக் வர்மா போன்ற இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்காக தயாராகும் படி இளைஞர்களுக்கு தேர்வு குழு சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

IPL Star batsman Rinku singh might be selected for WI t20 series

இந்த நிலையில் டெஸ்ட் அணியில் இருந்து புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டது குறித்து தேர்வுக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதில் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டது தற்காலிகம்தான் என்றும் அவர் தனது பார்மை மீண்டும் நிரூபித்தால் அணியில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இளம் வீரர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காகவே புஜாரா நீக்கப்பட்டதாகவும் அவருடைய பார்மை நிரூபித்தால் நிச்சயம் இந்திய அணியில் இடம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

IPL Star batsman Rinku singh might be selected for WI t20 series

இது போன்று உமேஷ் யாதவ் காயம் காரணமாக தான் அணியில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று இந்திய டி20 அணி நேரடியாக வெஸ்ட் இண்டீசிலிருந்து அயர்லாந்துக்கு சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் பும்ரா இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆசிய கோப்பைக்கு தயாராகும் விதமாக முதலில் பும்ராவை அயர்லாந்து தொடரில் களமிறக்கி சோதித்து பார்க்க தேர்வு குழு முடிவு செய்துள்ளது.

Story first published: Monday, June 26, 2023, 10:10 [IST]
Other articles published on Jun 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+