Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் டூ சிஎஸ்கே.. ஹர்திக்குடன் தீபக் சாஹர்.. மெகா ஐபிஎல் டீல் பற்றி சொன்ன அஸ்வின்

மும்பை: ஐபிஎல் 2027 மினி ஏலத்திற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வர்த்தக முறையில் ஒப்பந்தம் செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக்கைப் பெற சிஎஸ்கே எந்த வீரரைக் கொடுக்க வேண்டும் என்பது குறித்து முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதில் தங்கள் முன்னாள் வீரர் தீபக் சாஹரை சிஎஸ்கே அணி திரும்பப் பெற வாய்ப்பு உள்ளதாக கூறி இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்காக சிஎஸ்கே அணி தங்களது ஆல்ரவுண்டர் சிவம் துபேவை தர முன்வரலாம் எனக் கூறப்படும் நிலையில் அது மட்டும் போதாது என அஸ்வின் கூறி இருக்கிறார். "மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெறும் சிவம் துபேவை மட்டும் வாங்கிக் கொண்டு ஹர்திக் பாண்டியாவை விட்டுக்கொடுக்க நிச்சயம் சம்மதிக்காது. துபேவுடன் சேர்த்து ஆயுஷ் மத்ரேவையும் மும்பை அணி உறுதியாகக் கேட்கும். மத்ரே இல்லாமல் இந்த வர்த்தகம் அடுத்த கட்டத்திற்கு நகராது" என்று தனது யூடியூப் சேனலில் அஸ்வின் பேசியுள்ளார்.

IPL Trade CSK might get Deepak Chahar along with Hardik Pandya from Mumbai Indians says Ashwin

மேலும் சிஎஸ்கேவுக்கு இருக்கும் மாற்று வழிகளையும் அஸ்வின் பட்டியலிட்டார். "ஒருவேளை ஆயுஷ் மத்ரேவை தர சிஎஸ்கே மறுத்தால், சிவம் துபேவுடன் சேர்த்து வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸை தரலாம். எல்லிஸ் வந்தால் பும்ராவுடன் இணைந்து டெத் ஓவர்களில் பந்துவீச மும்பைக்குப் பலம் கிடைக்கும். அதற்கும் மும்பை இந்தியன்ஸ் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், துபே, எல்லிஸ் உடன் விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேலையும் சேர்த்து 3 வீரர்களை சிஎஸ்கே வழங்கலாம். இதன் மூலம் மும்பைக்கு ஒரு விக்கெட் கீப்பரும் கிடைப்பார். மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தால் மறுக்கவே முடியாத அளவிற்கு வலுவான சலுகையை சிஎஸ்கே கொடுக்க வேண்டும்" என்றார்.

“அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷனுக்கு அநீதி இழைக்கிறார்கள்”.. யுவராஜ் சிங் ஆதங்கம்

“அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷனுக்கு அநீதி இழைக்கிறார்கள்”.. யுவராஜ் சிங் ஆதங்கம்

இரு அணிகளுக்கும் இடையில் பல வீரர்களை உள்ளடக்கிய மெகா வர்த்தகம் நடக்கலாம் என்றும் அஸ்வின் கணித்துள்ளார். "சிஎஸ்கே அணி துபே, எல்லிஸ், உர்வில் மற்றும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை வழங்கி, அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவுடன் சேர்த்து தீபக் சாஹரையும் திரும்பப் பெறலாம். இதன் மூலம் சென்னைக்கு ஒரு புதிய பந்து வீச்சாளரும், பழைய அனுபவமும் கிடைக்கும்" என்று அஸ்வின் கூறியுள்ளார். ஐபிஎல் 2027 தக்கவைப்புப் பட்டியலை வெளியிட நவம்பர் 15 கடைசி நாளாக உள்ள நிலையில், இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை ரசிகர்களிடையே மிகுந்த ஆவலைத் தூண்டியுள்ளது.

இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என மார்தட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்.. கழுவி ஊத்திய நெட்டிசன்கள்

Also Read

இந்தியாவை வீழ்த்தி விட்டோம் என மார்தட்டிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்.. கழுவி ஊத்திய நெட்டிசன்கள்
Story first published: Saturday, October 31, 2026, 8:17 [IST]
Other articles published on Oct 31, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+