Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அயர்லாந்துக்கு சாதகமாக விழுந்த டாஸ்.. தோனி வார்த்தையை சொன்ன பும்ரா.. இவரும் புலம்ப வைக்கிறாரே!

டப்ளின்: இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஸ்டெர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறைப்படி வெற்றிபெற்றது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது 6.3 ஓவர்களில் 46 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த நடுவர்கள் மழை நிற்காததால், இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி வெற்றிபெற்றதாக அறிவித்தனர்.

Ireland won the toss and Chose to Field against India in the Second T20 Match

இதையடுத்து இன்று 2வது டி20 போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் ஸ்டெர்லிங் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்தப் போட்டியில் இரு அணிகளுமே எவ்வித மாற்றங்களும் இல்லாமல் முதல் டி20 போட்டியில் களமிறங்கியே அதே அணியுடன் களமிறங்கியுள்ளது.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் பும்ரா பேசுகையில், நாங்கள் டாஸ் வென்றிருந்தாலும் பேட்டிங்கையே தேர்வு செய்திருப்போம். இன்றைய நாளின் வானிலை நன்றாக உள்ளது. அதனால் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை. தொடக்கத்தின் போது கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியுள்ளது. அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.

முதல் டி20 போட்டியில் சொதப்பிய அர்ஷ்தீப் சிங் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே அணியுடன் இந்தியா அணி கேப்டன் பும்ரா களமிறங்கி இருக்கிறார். இதனால் பலரும் தோனியை போல் பும்ராவும் அணித் தேர்வில் ரசிகர்களை புலம்ப வைப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அணி விவரம்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், பும்ரா, ரவி பிஷ்னாய்

அயர்லாந்து அணி விவரம்: பால்பிர்னி, ஸ்டெர்லிங், டக்கர், டெக்டர், குர்திஸ், டாக்ரெல், மார்க் அடைர், மெக்கர்தி, கிரைக் யங், ஜோஷ்வா லிட்டில், ஒயிட்

Story first published: Sunday, August 20, 2023, 19:39 [IST]
Other articles published on Aug 20, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+