For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜேஸன் ராய் "சரவெடி" ஆட்டம்.. காவ்யா மாறன் முகத்தில் கலகல "சிரிப்பு" - பட்டாசு இன்னிங்ஸ்

துபாய்: டேவிட் வார்னர் அணியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் வார்னருக்கு பதில் சேர்க்கப்பட்ட ஜேஸன் ராய் தனது தேர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.27) நடைபெற்று வரும் ஆட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

 23 பந்துகளில் 36

23 பந்துகளில் 36

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக எவின் லெவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில், லெவிஸ் வெறும் 6 ரன்களில் 6 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். இதன் பிறகு நம்பிக்கை அளித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால், 23 பந்துகளில் 36 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். மறுபக்கம் ஒன் டவுன் வீரராக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மிக நிதானமாக விளையாடினார். ஏனெனில், இந்த போட்டியின் வெற்றி அவர்களுக்கு மிக மிக முக்கியமானது. அதேசமயம், ஹைதராபாத் ஏற்கனவே லீக்கில் இருந்து வெளியேறிவிட்டதால், எந்தவித கவலையும் இன்று ஃப்ரீயாக விளையாடினார்கள்.

 சாம்சன் அதிரடி

சாம்சன் அதிரடி

பிறகு லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், நங்கூரம் பாய்ச்சி விளையாடிய சாம்சன், 15 ஓவர்களுக்கு பிறகு தனது கியரை மாற்ற ஆரம்பித்தார். அதன்பிறகு, சாம்சன் 41 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். மறுபக்கம் லோம்ரோர் சிறப்பாக கம்பெனி கொடுத்தார். சித்தார்த் கவுல் வீசிய 16வது ஓவரில், 20 ரன்களை விளாசினார் சாம்சன். ஹைதராபாத் அணியின் எந்த பவுலர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. முடிவில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்த ராஜஸ்தான், கடைசி 10 ஓவர்களில் ஓரளவு டீசண்ட்டாக விளையாடி164 ரன்கள் எடுத்தது.

 ஜேஸன் ராய்க்கு வாய்ப்பு

ஜேஸன் ராய்க்கு வாய்ப்பு

இதையடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணியில், கடந்த சில போட்டிகளாக சொதப்பி வந்த டேவிட் வார்னர் அணியில் இருந்து நீக்கப்பட, அவருக்கு பதில் ஜேஸன் ராய் களமிறக்கப்பட்டார். கடந்த இரு ஐபிஎல் சீசன்களில் வார்னரால் துளி இம்பேக்ட் கூட ஏற்படுத்த முடியவில்லை. அவரது கேப்டன்ஷிப்பில் சன் ரைசர்ஸ் மிகவும் மோசமாக விளையாட, தொடரின் பாதியில் இருந்தே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது SRH நிர்வாகம். ஒரு பிளேயராகவும் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் கேன் வில்லியம்சன் கேப்டனாக்கபட்டார். அவரது கேப்டன்ஷிப்பிலும் சன் ரைசர்ஸ் தோற்று வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகளிலும் வார்னர் முதல் ஓவரிலேயே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால் தான் ஜேஸன் ராய்க்கு வாய்ப்பு கிடைத்தது.

 பறந்த சிக்ஸர்கள்

பறந்த சிக்ஸர்கள்

தொடக்கம் முதலே ராஜஸ்தான் பவுலர்களை கடாசிய ஜேஸன் ராய் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவரது மெகா அதிரடியில், 11 ஓவர்கள் முடிவில், ஹைதராபாத் 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் குவித்தது. இத்தனை நாட்கள் வாய்ப்பு கிடைக்காமல் வெளியே உட்கார்ந்திருந்த ஜேஸன், இன்று ஒரே போட்டியில் தனது ஆளுமையை நிரூபித்துவிட்டார். அதிரடியாக விளையாடிய ஜேஸன் ராய் 42 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால், அணியில் மீண்டும் டேவிட் வார்னரின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது.

 ராஜஸ்தானுக்கு சிக்கல்

ராஜஸ்தானுக்கு சிக்கல்

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன், 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி, இவர்களுக்கு கீழே உள்ளது. அதேசமயம், தொடரைவிட்டு ஏற்கனவே வெளியேறிவிட்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஸோ, இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றியை பதிவு செய்தாக வேண்டும். அப்போது தான் அவர்கள் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க முடியும்.

Story first published: Monday, September 27, 2021, 22:34 [IST]
Other articles published on Sep 27, 2021
English summary
jason roy justified his inclusion against rr - ஜேஸன் ராய்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+