Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரேயொரு போட்டி.. 5 சாதனைகளை உடைக்கப்போகும் ஜஸ்பிரிட் பும்ரா.. அக்ரம், முரளிதரன் ரெக்கார்ட் க்ளோஸ்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பும்ரா வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டின் போது புதிய சாதனை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மட்டும் பும்ரா வீழ்த்திவிட்டால், ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் எந்த பவுலராலும் செய்ய முடியாத சாதனையை பும்ரா படைப்பார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனர். இந்த போட்டியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2வது டெஸ்டில் விளையாடாமல் பும்ரா ஓய்வில் இருந்தார்.

Jasprit Bumrah on the Verge of Historic Bowling Record in 4th Test vs England

இதனால் பும்ராவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் ஓய்வு அளிக்கப்படுமா என்ற கேள்வியுடன் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இந்திய அணிக்கு இது வாழ்வா, சாவா போட்டி என்பதால் பும்ரா ஆடுவார் என்பதே பலரின் கணிப்பாகவும் உள்ளது. இந்த நிலையில் மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

அதன்படி 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா ஒரேயொரு விக்கெட்டை எடுத்தாலும், பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைப்பார். இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை 50 முறை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைப்பார். அதேபோல் 3 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையைப் பெறுவார்.

இதுவரை இஷாந்த் சர்மா 15 போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் விளையாடி 51 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்து வருகிறது. பும்ரா 11 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதனால் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், பும்ரா புதிய சாதனையைப் படைக்க முடியும். அதேபோல் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இன்னொரு சாதனையைப் படைக்க முடியும்.

இங்கிலாந்து மண்ணில் 14 போட்டிகளில் விளையாடிய வாசிம் அக்ரம் 53 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் அடுத்த போட்டியில் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய மைல்கல்லை பும்ரா எட்டுவார். அதேபோல் 5 விக்கெட்டுகளை ஒரே இன்னிங்ஸில் வீழ்த்தினால், முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் முடியும்.

இங்கிலாந்து மண்ணில் ஆசிய பவுலர்களிலேயே அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது முத்தையா முரளிதரன் தான். இதன்பின் பும்ரா 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார். இதன் மூலமாக முத்தையா முரளிதரனின் சாதனையைச் சமன் செய்ய முடியும். அதேபோல் SENA நாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைப்பார். இதனால் பும்ரா களமிறங்க வேண்டும் என்று ரசிகர்கள் அதிக ஆவலுடன் இருக்கின்றனர்.

Story first published: Sunday, July 20, 2025, 18:06 [IST]
Other articles published on Jul 20, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+