Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL : புயலைக் கிளப்பிய பும்ரா.. கேப்டன் பதவிக்காக ஆரம்பித்த பஞ்சாயத்து.. ரசிகர்கள் ஊகம்

மும்பை : இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வேகமாக பரவி புயலைக் கிளப்பி இருக்கிறது.

அந்த பதிவால் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் எனவும், ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பியதால் அந்த அணியின் கேப்டன் பதவி யாருக்கு என்ற பிரச்சனை வெடித்துள்ளது என ரசிகர்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஊக அடிப்படையில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

ஐபிஎல் மினி ஏலத்துக்கு நான்கு வாரம் இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்கள் வீரர்கள் பட்டியலை இறுதி செய்ய வேண்டிய கடைசி நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாவினார்.

Jasprit Bumrah post stirred some speculations around Rohit Sharma and Hardik Pandya

தற்போது குஜராத் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியா அணி மாறி இருக்கும் நிலையில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பதவி அளிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. ரோஹித் சர்மா சிறந்த கேப்டனாக இதுவரை அந்த அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். அதே அணியில் தான் பும்ரா இருக்கிறார்.

ஹர்திக் பாண்டியா 2015 முதல் 2021 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் தான் இருந்தார். அதன் பின் குஜராத் அணி புதிதாக சேர்க்கப்பட்ட போது அங்கே கேப்டனாக சென்றார். தற்போது மீண்டும் மும்பை அணிக்கே திரும்பி இருக்கிறார். ஆனால், பும்ரா பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகாமல் அதே அணியில் நீடித்து வருகிறார். அதனால், ரோஹித் சர்மாவுக்கு பின் பும்ராவுக்கு அடுத்த ஆண்டு கேப்டன் பதவி கைமாறும் என கூறப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது பாண்டியாவுக்கு இந்த ஆண்டோ, அல்லது அடுத்த ஆண்டோ மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் பும்ரா தன் இன்ஸ்டாகிராம் பதிவில், "சில சமயம் மௌனமே சிறந்த பதில்" எனக் கூறி இருக்கிறார். இந்த பதிவில் பும்ரா எந்த பெயரையும், சம்பவத்தையும் குறிப்பிடவில்லை.

இதை அடுத்து ரசிகர்கள், பும்ராவுக்கு கேப்டன் பதவி அளிக்கவில்லை என்பதால் இப்படி கூறி இருக்கிறார் எனவும், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவியை மும்பை இந்தியன்ஸ் அணியில் பறித்து விட்டார்கள் என்ற தகவல் தெரிந்ததால் இப்படி பதிவிட்டு இருக்கிறார் எனவும் பல்வேறு ஊக அடிப்படையில் கூறி வருகிறார்கள்.

பும்ராவுக்கு தனிப்பட்ட வாழ்வில் எதுவும் சிக்கலா? அல்லது இது எதையும் குறிக்காத சாதாரண பதிவா? எனவும் சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆக மொத்தத்தில் ரசிகர்கள் மத்தியில் ஒரு புயலை கிளப்பி இருக்கிறார் பும்ரா.

Story first published: Tuesday, November 28, 2023, 12:04 [IST]
Other articles published on Nov 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+