For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பும்ராவின் புதிய லுக்... அப்படியே ஸ்லாடன் மாதிரியே இருக்கு... உச்சி முகர்ந்த குருணால்

துபாய் : இன்றைய தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன.

முன்னதாக தன்னுடைய லுக்கை முழுமையாக மாற்றியுள்ளார் மும்பை அணியின் நட்சத்திர பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா.

இதையடுத்து அவர் கால்பந்தாட்ட ஜாம்பவான் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் போன்று இருப்பதாக அணியின் குருணால் பாண்டியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல் அணியாக தேர்வு

முதல் அணியாக தேர்வு

ஐபிஎல் 2020 சீசனின் பிளே-ஆப் சுற்றிற்கு சென்ற முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. லீக் போட்டிகளை சிறப்பாக முடித்துள்ள அந்த அணி இன்றைய தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக தன்னுடைய லுக்கை முழுமையாக மாற்றியுள்ளார் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா.

வீடியோ வெளியிட்ட பும்ரா

வீடியோ வெளியிட்ட பும்ரா

இந்த புதிய லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்ஸ் அப் முத்திரை மற்றும் அழகான சிரிப்புடன் வெளியிட்டுள்ளார் பும்ரா. மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தான் மற்றும் தன்னுடைய அணி டெல்லியை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் மைதானத்தில் பார்க்கலாம் என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

ஸ்லாடன் போன்ற லுக்

ஸ்லாடன் போன்ற லுக்

இந்த வீடியோவை பார்த்த மும்பை அணி வீரர் குருணால் பாண்டியா, கால்பந்தாட்ட ஜாம்பவான் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் போன்று பும்ரா உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். தகுதிச்சுற்றுக்காக சிறப்பாக தயாராகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரபடாவை முந்துவார் என எதிர்பார்ப்பு

ரபடாவை முந்துவார் என எதிர்பார்ப்பு

இந்த ஐபிஎல் சீசனில் தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபடாவிற்கு அடுத்தபடியாக 13 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இன்றைய தகுதிச்சுற்று போட்டியில் அவர் விக்கெட்டுகளை எடுத்து ரபடாவை முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, November 5, 2020, 10:01 [IST]
Other articles published on Nov 5, 2020
English summary
MI take on Delhi Capitals in qualifier 1 of the ongoing edition
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+