Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா vs வாசிம் அக்ரம் vs ஆண்டர்சன்: 46 டெஸ்ட் போட்டிகளில் யார் சிறந்த பந்துவீச்சாளர்?

லீட்ஸ்: இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா, இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் மொத்தம் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளார். அவர் உலகின் முன்னணி பந்துவீச்சாளர் எனச் சொல்லப்படுவதோடு மட்டுமல்லாமல், பல தலைமுறைகளைச் சேர்ந்த சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிட்டும் அவரைச் சிறந்த பந்துவீச்சாளர் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், வேகப்பந்துவீச்சில் பல நுணுக்கங்களை அறிமுகம் செய்த ஜாம்பவான் வாசிம் அக்ரம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 700-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி எந்த வேகப்பந்துவீச்சாளரும் செய்யாத சாதனையைச் செய்த இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோருடன் பும்ராவை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவர்கள் மூவரும் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்த நிலையில் எத்தனை விக்கெட்டுகள் எடுத்திருந்தார்கள், அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பது பற்றி ஒப்பிட்டுப் பார்ப்போம்.

Jasprit Bumrah Wasim Akram James Anderson Test Cricket

விக்கெட்டுகள்:

46 டெஸ்ட் போட்டிகளின் முடிவில், பும்ரா 210 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். வாசிம் அக்ரம் 183 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 156 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். விக்கெட் வீழ்ச்சியில் பும்ராவே முன்னிலையில் இருக்கிறார்.

பந்துவீச்சு சராசரி (Bowling Average):

அடுத்து பந்துவீச்சு சராசரி அடிப்படையில் பார்த்தால், 46 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் பும்ரா 19.6 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்துள்ளார். வாசிம் அக்ரம் 23.59 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 34.81 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார்.

பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் (Bowling Strike Rate):

தங்களின் முதல் 46 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பார்த்தால், அதிலும் பும்ராவே முன்னிலையில் இருக்கிறார். பும்ராவின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 42.3 என்பதாக உள்ளது. வாசிம் அக்ரமின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 55.6 என்பதாகவும், ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்துவீச்சு ஸ்ட்ரைக் ரேட் 60.4 என்பதாகவும் இருந்தது.

ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் (Five-Wicket Hauls):

இவர்கள் மூவரில் டெஸ்ட் போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் அல்லது அதற்கு அதிகமாக வீழ்த்திய சாதனையை அதிகமாகச் செய்திருப்பதும் பும்ரா தான். அவர் 14 முறை இந்த சாதனையைச் செய்திருக்கிறார். வாசிம் அக்ரம் 12 முறையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 8 முறையும் ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் அல்லது அதற்கு மேல் வீழ்த்தியிருந்தனர்.

இதில் தங்களது முதல் 46 போட்டிகளில் வாசிம் அக்ரம் மட்டுமே ஒரு போட்டியில் பத்து விக்கெட் அல்லது அதற்கு மேல் வீழ்த்திய சாதனையை இரண்டு முறை செய்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளில் செயல்பாடு:

இதை அடுத்து இவர்கள் மூவரும் சொந்த மண்ணில் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள், வெளிநாடுகளில் எப்படி செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

ஜஸ்பிரித் பும்ரா: இந்திய மண்ணில் 17.19 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருக்கிறார். வெளிநாடுகளில் 19.73 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருக்கிறார். இதன் வித்தியாசம் 2.54 என்பதாக உள்ளது.

வாசிம் அக்ரம்: தனது முதல் 46 போட்டிகளின் முடிவில் பாகிஸ்தானில் 23.76 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார். வெளிநாடுகளில் 23.49 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார். வாசிம் அக்ரம் தனது சொந்த மண்ணை விட வெளிநாடுகளில் அவர் சிறப்பாக பந்துவீசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் ஆண்டர்சன்: இங்கிலாந்து மண்ணில் 30.29 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார். வெளிநாடுகளில் 43.84 என்ற பந்துவீச்சு சராசரியை வைத்திருந்தார். இதன் வித்தியாசம் 13.5 என்பதாகும்.

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், முதல் 46 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் பும்ரா தான் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். வாசிம் அக்ரம் அவருக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சனின் வித்தியாசம் மிகவும் அதிகமாகவே உள்ளது.

Story first published: Thursday, June 26, 2025, 15:55 [IST]
Other articles published on Jun 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+