அனைவரின் கணிப்பும் தவறு.. அமீரகத்தில் ஐபிஎல்- ஐ நடத்த இதுதான் காரணம்.. உண்மை வெளியானது!
மும்பை: ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பின்னணியில் உள்ள உண்மை காரணம் தெரியவந்துள்ளது.
கொரோனாவால் தடைபட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்துவதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இதுவரை 29 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் உள்ளன. இந்த போட்டிகளை நடத்தி முடிக்காவிட்டால் பிசிசிஐ-க்கு ரூ.2500 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடர்
இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிசிசிஐ நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேதிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எப்படியும் செப்.18ம் தேதி தொடங்கி ஆக.10ம் தேதி வரை தான் இந்த தொடர்கள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து
முதலில் எஞ்சியுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோது டெஸ்ட் தொடர் ஆக.4 முதல் செப்.14 வரை நடைபெறுகிறது. எனவே இந்த தொடரை ஒரு வாரம் முன்கூட்டியே நடத்தினால் செப்டம்பரில் ஐபிஎல்-ஐ அங்கு நடத்தலாம் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் பிசிசிஐ-ன் கோரிக்கையை ஏற்க இங்கிலாந்து வாரியம் மறுத்துவிட்டது.

ரசிகர்கள்
இந்நிலையில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தினால் செலவுகள் குறைவு, அதே போல இங்கிலாந்தில் மழைப்பொழிவு இருக்கும் என்றகாரணத்தால் அமீரகத்தில் நடத்தப்படுகிறது என பல கருத்துக்கள் உலா வந்தன. இதற்கு தற்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

உண்மை காரணம்
அதில் "செப்டம்பர், அக்டோபர் ஆகியவை இந்தியாவில் பருவமழை காலம் ஆகும். அப்போது ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்தினால் பாதி ஆட்டங்களை மழையே கெடுத்துவிடும். இதன் காரணமாகத்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். எஞ்சிய போட்டிகளை நடத்த முடிவு செய்தோம், அங்கு வானிலை சரியாக இருக்கும் என ஜெய் ஷா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications