ப்பா.. என்ன ஒரு மாஸ்டர் ப்ளான்... ஐபிஎல் தொடரால் இங்கிலாந்துக்கு நன்மை? ஸ்கெட்ச் போடும் ஜாஸ் பட்லர்!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் விளையாடுவதை வைத்து உலகக்கோப்பை தொடர் வரை பிளான் போட்டுள்ளார் இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர்.
14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி மே 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இங்கிலாந்து அணி வீரர்கள் பங்கேற்பது பெரும் சர்ச்சையாகி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-ல் பங்கேற்பதால் பணத்தை விட அதிகமாக நன்மை கிடைக்கும் எனக்கூறி ஜாஸ் பட்லர் தனி ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளார்.

ஐபிஎல் தொடர்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐபிஎல் 2021 தொடர் அடுத்த மாதம் 9ம் தேதி தொடங்கவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடர் மே மாதம் 30ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து வீரர்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை திட்டமிட்டுள்ளது. இத்தொடர் ஜூன் 2ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் போட்டிக்காக இந்தியாவிலேயே இருப்பதால், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாமல் போகும். எனவே பட்லர், ஆர்ச்சர், பேர்ஸ்டோ உள்ளிட்ட முக்கிய வீரர்களை அந்த அணி இழக்கிறது. இதனால் நாட்டை விட ஐபிஎல் முக்கியமாக போய்விட்டதா என அவர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விளக்கம்
இதுகுறித்து பேசியுள்ள ஜாஸ் பட்லர், ஐபிஎல்-ல் விளையாடுவதால் பணத்தையும் தாண்டி லாபம் இருக்கிறது. இது தனிப்பட்ட வீரர்களுக்கு மட்டுமல்ல இங்கிலாந்து அணிக்கும் தான். டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு இந்தியாவில் தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாட ஐபிஎல் போட்டி நல்ல அனுபவத்தை கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் ஸ்டேடியம்
இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஜாஸ் பட்லரும் பங்கேற்கிறார். இதுகுறித்து பேசிய அவர், உலகக்கோப்பை டி20 தொடரில் அகமதாபாத் மைதானம் முக்கிய பங்கு வகிக்கும். இந்த மைதானத்தில் இங்கு அவ்வளவாக ஆடியதில்லை. எனவே இந்த டி20 தொடர் மூலம் இங்கிலாந்து வீரர்கள் அகமதாபாத் மைதானம் குறித்து நல்ல அனுபவத்தை பெறலாம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications