Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2021: அப்படியே ஷாருக்கான் - ஜூஹியை போலவே... களத்தில் குதித்த வாரிசுகள்.. கொண்டாடும் ரசிகர்கள்

மும்பை: ஐபிஎல் தொடரில் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை ஜுஹி சாவ்லா ஆகியோர் நட்பாக இணைந்து தொடங்கி வைத்த பணியை தற்போது அவர்களின் வாரிசுகள் செய்து வருவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவாக பார்க்கப்படும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணி கவுதம் கம்பீர் தலைமையில் இதுவரை 2012 மற்றும் 2014 என 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

ஷாருக் - ஜூஹி நட்பு

ஷாருக் - ஜூஹி நட்பு

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி ஆகியோர் இணைந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர்கள் ஆகும். இவர்கள் திரைக்கு பின்னால் மிக நெருங்கிய நண்பர்கள். இவர்களின் நட்பை உறுதியாக்கும் வகையில் இருவரும் இணைந்து கடந்த 2013ம் ஆண்டும் ட்ரீம் ஃபில்ம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கினர். இதன் பின்னர் ஷாருக்கான் மற்றும் ஜூஹி சாவ்லாவின் கணவர் ஜெய் மேக்தா இணைந்து ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை வாங்கினர்.

வைரல் புகைப்படம்

வைரல் புகைப்படம்

ஒவ்வொரு ஆண்டின் ஐபிஎல் ஏலத்தின் போதும் நடிகர் ஷாருக்கான், அல்லது நடிகை ஜூஹி சாவ்லா ஆகியோரில் யாரோ ஒருவர் அணியின் டேபிளில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் வீரர்களை ஏலம் எடுப்பது குறித்து அணி நிர்வாகிகளுடன் கலந்தாலோசிப்பார்கள். ஆனால் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் போது சற்று வித்தியாசமாக அவர்கள் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு பதிலாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் ஜூஹியின் மகள் ஜானவி ஆகியோர் இணைந்து பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் அப்போது இணையத்தில் படு வைரலானது. ஷாருக்கானை போலவே அவரது மகனும், ஜூஹியை போலவே அவரது மகளும் உட்கார்ந்திருந்தது ஆச்சரியத்தை கொடுத்தது.

மனம் திறந்த நடிகை

மனம் திறந்த நடிகை

இந்நிலையில் தங்களது வாரிசுகளின் நட்பு குறித்து ஜூஹி மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இயற்கை எவ்வளவு அழகானது, இருவரும் எங்களை போலவே தோற்றத்துடன் அந்த புகைப்படத்தில் அமர்ந்துள்ளனர். அது மிகவும் அழகாக உள்ளது. ஆர்யன் மற்றும் ஜானவி இருவருக்குமே கிரிக்கெட்டின் மீது அதிக ஆர்வமும், தெளிவும் உள்ளது. எனவே அவர்கள் எங்கள் அணியின் நிர்வாகத்தில் பங்கெடுத்துக் கொண்டது பெருமையாக உள்ளது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

ஏலத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என எந்தவித நிர்பந்தமும் அவர்களுக்கு தரப்படவில்லை. அவர்கள் இருவரும் விரும்பியே இதனை செய்தனர். அவர்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்துள்ளது. அவர்கள் தொடர்ந்து அதனை பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக ஜானவி உலகில் நடைபெறும் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்காக இரவு உறங்காமல் இருந்துள்ளார். அவருக்கு கிரிக்கெட்டில் அவ்வளவு ஆர்வமும், நுணுக்கங்களும் தெரிந்திருப்பதை கண்டு நான் ஆச்சரியமடைந்ததுண்டு. நானும், ஷாருக்கானும் தொடங்கி வைத்ததை தற்போது அவர்கள் இருவரும் இணைந்து நடத்தி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது எனத்தெரிவித்துள்ளார்.

இருவரின் வெளியுலக வாழ்க்கை

இருவரின் வெளியுலக வாழ்க்கை

ஜூஹி சாவ்லாவின் மகள் ஜானவி எந்தவித சினிமா துறை மற்றும் பிரபல நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். மற்றொரு புறம் ஆர்யன் விரைவில் பாலிவுட் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் எனக்கூறப்படுகிறது. ஆர்யனின் நெருங்கிய தோழியான அனன்யா என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி, ஆர்யன் எதிர்காலத்தில் இயக்குநராக விரும்புகிறார் எனத்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 25, 2021, 17:12 [IST]
Other articles published on Aug 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+