
பெருமையாக கருதுகிறேன்
தனது ஓய்வு குறித்து ரசிகர்களுக்கு பொலார்ட் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் என் வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான முடிவு இது. நான் இன்னும் சில ஆண்டுகள் விளையாட நினைத்தேன். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு என் ஐபிஎல் வாழ்க்கை குறித்து இந்த முடிவு எடுத்துள்ளேன்.மும்பை இந்தியன்ஸ் போன்ற ஒரு அணியில் விளையாடியது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்.

புதிய பொறுப்பு
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான் விளையாடவில்லை என்றால், இனி வேறு எந்த அணிக்காகவும் என்னால் விளையாட முடியாது. ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணியில் வந்தால் வாழ்நாள் முழுவதும் மும்பை வீரராக இருப்பார்கள். அப்படித்தான் கண்டிப்பாக நான் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விடைபெறவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு பேட்டிங் பயிற்சியாளராக ஐபிஎல் செயல்பட வாய்ப்பு கொடுத்திருக்கிறது.

அதிர்ஷ்டமாக கருதுகிறேன்
இதன் மூலம் என் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்குகிறது. வீரராக இருந்து பயிற்சியாளராக நான் மாற உள்ளேன். ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்காக ஆட வேண்டும் என்பது என் நீண்ட நாள் எண்ணம். ஐபிஎல் தொடரில் விளையாடும் அனுபவத்தை ஒரு வீரராக நான் நிச்சயம் மிஸ் செய்வேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் பல கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் விளையாடியதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.

மனமார்ந்த நன்றி
மும்பை இந்தியன்ஸ் அணி எனக்கு ஆடுகளத்திலும் சரி , என் வாழ்க்கையிலும் சரி நல்ல ஆதரவுகளை கொடுத்திருக்கிறது. நாங்கள் ஒரே அணியாக இணைந்து இரண்டு சாம்பியன்ஸ் கோப்பையும், ஐந்து ஐபிஎல் கோப்பையும் வென்றோம். இந்த நேரத்தில் என்னுடைய பயிற்சியாளர்கள், சக வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று மும்பை அணியின் உரிமையாளர் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி ,ஆகாஷ் அம்பானி ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே குடும்பம்
மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ஒரு குடும்பமாக பார்த்தது. அது வெறும் வார்த்தை மட்டும் அல்ல , அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அது எனக்கு தெரிந்தது. எனது குடும்பத்தின் சார்பாகவும், நான் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலம் நோக்கி நான் ஒரு நல்ல முடிவை எடுத்து இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடர்ந்து பயிற்சியாளாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நாம் எல்லாம் ஒரே குடும்பம் என்று பொலார்ட் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











