Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரொம்ப லேட்.. கொல்கத்தா அணி வீரருக்கு கொரோனா நெகட்டீவ்.. நாடு திரும்ப ரெடி.. ஆனா மெகா வாய்ப்பு போச்சே

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் சிக்கியிருந்த கொல்கத்தா அணி வீரர் ஒருவர் தாய் நாடு திரும்ப அனுமதி கிடைத்துவிட்டது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 தொடரில் கடுமையான பயோ-பபுளையும் மீறி கொரோனா உள்ளே நுழைந்தது. இதனால் தொடர் கடந்த மே 4ம் தேதி முதல் ஒத்திவைக்கப்பட்டது.

முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பிறகு டெல்லி, சென்னை, ஐதராபாத் என மற்ற அணி வீரர்களுக்கும் பரவி ஐபிஎல் தொடரையே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மூன்றாவது வீரர்

மூன்றாவது வீரர்

கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி முதல் ஆளாக பாதிக்கப்பட, அதே அணியில் அடுத்தடுத்து 4 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதில் மூன்றாவது வீரராக பாதிக்கப்பட்டவர் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபெர்ட். கடந்த மே 8ம் தேதி இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. உடனடியாக, இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாக மருத்துவக் குழு சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது.

2 வார சிகிச்சை

2 வார சிகிச்சை

ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து அயல்நாட்டு வீரர்களும் நாடு திரும்பிய நிலையில் ஒருசில வீரர்கள் மட்டும் கொரோனாவால் இந்தியாவில் சிக்கியிருந்தனர். அதில் டிம் செய்ஃபெர்ட்-ம் ஒருவர். எனினும் அவருக்கு கொரோனா பாதிப்பு வீரியம் பெரியளவில் இல்லை.

நெகட்டீவ்

நெகட்டீவ்

இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக சிகிச்சைப்பெற்று வந்த செய்ஃபெர்ட் தற்போது பூரண குணமடைந்துள்ளார். அவருக்கு சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா நெகட்டீவ் என முடிவு வந்துள்ளது. இதனையடுத்து அவரை எப்படி தாய்நாட்டிற்கு அனுப்புவது என்ற பேச்சுவார்த்தையில் கொல்கத்தா அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.

வாய்ப்பு போனது

வாய்ப்பு போனது

கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் சிறப்பாக ஆடிய டிம் செய்ஃபெர்ட், இந்தாண்டு அணியில் தக்கவைக்கப்பட்டார். எனினும் இந்த சீசனில் அவருக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்சில் சும்மாவே உட்கார்ந்திருந்த போதும் கொரோனா தாக்கியதால் அவருக்கு இந்தியாவுடனான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆடும் வாய்ப்பு பறிபோனது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, May 18, 2021, 21:29 [IST]
Other articles published on May 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+