Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘ஆத்தி என்னா பலம் ‘ மனைவியுடன் உடற்பயிற்சி சேலஞ்ச் செய்த சந்தீப் வாரியர்.. இதயங்களை வீசும் ரசிகர்கள்

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் சந்தீப் வாரியர் மற்றும் அவரது மனைவி சேர்ந்து மேற்கொள்ளும் உடற்பயிற்சி வீடியோ இணையத்தில் இதயங்களை வென்று வருகிறது.

இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், அணிகளின் பபுள்களுக்குள் கொரோனா நுழைந்ததால் கடந்த 4ம் தேதி முதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு முதலில் உறுதியான கொரோனா தொற்று பின்னர் டெல்லி, சிஎஸ்கே, ஐதராபாத் அணிகளுக்கும் பரவியது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களை ஒவ்வொரு அணியும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் உற்சாகப்படுத்தி வருகின்றன. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா ஆகிய அணிகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகளை மீம்ஸுகள் மூலம் கிண்டலடித்து வருகின்றன.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

இந்நிலையில் கொல்கத்தா அணி வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஐபிஎல் தொடரின் போது சந்தீப் வாரியரும், அவரது மனைவி ஆரத்தியும் சேர்ந்து மேற்கொண்ட உடற்பயிற்சி சேலஞ்ச் வீடியோ தான் அது. சந்தீப் வாரியரின் மனைவி ஆரத்தி இந்திய ஸ்கேட்டிங் வீராங்கனை ஆவார். இந்த பலமான ஜோடி 'Pulls off Insane Workout' சேலஞ்சை செய்துள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் இதயங்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

கொரோனா

கொரோனா

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தனது தோள்பட்டை காயத்திற்காக ஸ்கேன் எடுப்பதற்காக பபுளை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் எந்தவித குவாரண்டைனும் இல்லாமல் நேரடியாக பபுளுக்குள் வந்த அவர், சக வீரரான சந்தீப் வாரியருடன் ஒன்றாக அமர்ந்து உரையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடத சந்தீப் வாரியருக்கும் கொரோனா உறுதியானது. எனினும் அவர் தற்போது குணமடைந்து வீட்டில் உள்ளார்.

தனது அனுபவம்

தனது அனுபவம்

தனது கொரோனா அனுபவம் குறித்து பேசியிருந்த சந்தீப வாரியர், கொரோனா பாதிப்பு அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால் குணமடைந்த பிறகு தான் சிரமப்படுகிறேன். கொரோனாவின் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனால் தற்போது உடற்பயிற்சி செய்யும் போது மூச்சுப்பிரச்னை ஏற்பட்டது. வெகு சீக்கிரமாகவே சோர்வடைந்தேன். நான் பயிற்சி மூலம் பழைய நிலைக்கு திரும்ப தீவிரமாக முயற்சித்து வருகிறேன் எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 27, 2021, 21:24 [IST]
Other articles published on May 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+