Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் ராகுலுக்கு இடமில்லை.. ரோகித் சர்மா எடுத்த திடீர் முடிவு

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே எல் ராகுல் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Recommended Video

AsiaCup2022 இந்திய வீரர் Virat Kohli உருக்கமான பேச்சு

ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வரும் 27ஆம் தேதி துபாயில் தொடங்குகிறது.

இதற்காக இந்திய அணி இன்று துபாய் புறப்பட்டுச் செல்ல உள்ளது. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் தற்போது நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்.

ராகுலுக்கு இடமில்லை

ராகுலுக்கு இடமில்லை

இந்த நிலையில் நட்சத்திர வீரர் ராகுலுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு காரணம் ராகுல் காயம் காரணமாக இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 1 மற்றும் 30 ரன்களில் ராகுல் ஆட்டம் இழந்தார். ராகுல் இன்னும் பழைய அதிரடி ஆட்டத்துக்கு திரும்பவில்லை.

இடம் கிடைக்காது

இடம் கிடைக்காது

இதனால் முக்கியத்துவம் வாய்ந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ராகுலை களம் இறக்கி ரோகித் சர்மா ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இது தவிர பிளேயிங் லெவனிலும் ராகுலை களம் இறக்க இடம் இல்லை. காரணம் ராகுலை தொடக்க வீரராக விளையாட வாய்ப்பு வழங்கினால் நடு வரிசையில் சூரியகுமார் யாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் ஏதேனும் ஒருவருக்கு இடம் இல்லாமல் போய்விடும்.

யாருக்கு முக்கியத்துவம்

யாருக்கு முக்கியத்துவம்

மேலே சொன்ன இருவரும் தற்போது நல்ல பார்மில் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளிலும் வென்று கொடுத்திருக்கின்றனர். இதனால் ராகுலை விட சூரியகுமார் யாதவ் அல்லது தினேஷ் கார்த்திக் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் .இதனை அடுத்து கே எல் ராகுல் பதிலாக தொடக்க வீரராக யாரை களம் இருக்கலாம் என்று யோசனையில் ரோகித் சர்மா உள்ளார். நடு வரிசையில் இருக்கும் சூரியகுமார் அல்லது தொடக்க வீரராக ப்ரமோஷன் கொடுத்தால் மட்டுமே நடு வரிசையில் தினேஷ் கார்த்திக் போன்றோருக்கு இடம் கிடைக்கும்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

மேலும் இந்தியா இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் வைத்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். 1,ரோஹித் சர்மா 2, ரிஷப் பந்த் 3, விராட் கோலி 4, சூரியகுமார் யாதவ் 5, ஹர்திக் பாண்டியா 6, தினேஷ் கார்த்திக் 7,ஜடேஜா 8,புவனேஸ்வர் குமார் 9, ஹர்ஷிப் சிங் 10, சாகல் 11, ஆவேஷ் கான்

Story first published: Tuesday, August 23, 2022, 10:26 [IST]
Other articles published on Aug 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+