மும்பை: ஐபிஎல் தொடரில் அதிக ஊதியம் பெரும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமை விராட் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ஐபிஎல் அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லி, ஐபிஎல் டி20 தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். 2016ம் ஆண்டு தொடருக்காக, அவருக்கு ரூ.15 கோடி ஊதியம் தரப்படுகிறது. இதன் மூலம், ஐபிஎல் தொடரில் அதிக ஊதியம் பெரும் வீரராக அவர் விளங்குவார்.

புனே அணிக்காக விளையாட உள்ள இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் டோணி மற்றும் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும், ஷிகர் தவானுக்கு ரூ ரூ.12.5 கோடியும் ஊதியமாக அளிக்கப்படுகிறது.
பெங்களூர் அணிக்காக ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர், கிறிஸ் கெய்ல் இதுவரை ரூ.7.50 கோடியை ஊதியமாக வாங்கி வந்த நிலையில், இனிமேல் அவருக்கு ஊதியம் ரூ.8.40 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.