Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரேயொரு போட்டோ…! முடிவுக்கு வந்ததா கோலி, ரோகித் சண்டை…? இணையத்தில் வைரல்..!

ஆன்டிகுவா: ரோகித், கோலி இடையே ஏற்பட்டுள்ள மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

உலக கோப்பை தொடர் முடிந்ததில் இருந்து இந்திய அணிக்குள் ஒரு புகைச்சல் இருந்து கொண்டே இருந்தது. அது கோலிக்கும், ரோகித்துக்கும் மோதல் என்று. அந்த செய்தி இணையத்தில் பல ரூபங்களில் வெளிவந்து சக்கை போடு போட்டது..

உலக கோப்பை தோல்வியில் இருந்து திசை திருப்பவே இது போன்று பரப்பி விடப் பட்டது. இது ஒரு நாடகம் என்றும் கதைகள் கிளம்பின. இருவருக்கும் சமரசம் செய்து வைக்க பிசிசிஐயும் தயாரானது என்றும் கூறப்பட்டது.

வெளியான புகைப்படங்கள்

வெளியான புகைப்படங்கள்

ஆனால் அதற்கு பிறகு அந்த விவகாரம் சற்று அடங்கியது. இப்போது வேறு ஒரு கோணத்தில் அந்த செய்தி மீண்டும் றெக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது. அதற்கேற்ப வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில போட்டோக்களும் வெளியாக, ஆளாளுக்கு அதை பற்றியே பேசும் படி ஆகிவிட்டது.

கோலியின் போட்டோ

இந்நிலையில் தற்போது இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கோலி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு கடற் கரையில் குளித்து கொண்டிருக்கின்றனர்.

ரோகித்தும் இருக்கிறார்

ரோகித்தும் இருக்கிறார்

அப்போது ரோகித் சர்மாவும் அவருடன் இருக்கிறார். அனைவரும் தங்களது தோள் மீது கைகளை போட்டவாறு அந்த புகைப்படத்தில் காட்சி தருகின்றனர். இதன் மூலம் ரோகித் சர்மாவுக்கும், கோலிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை அவர்கள் சுமூகமாக இருக்கிறோம் என்பதை கோலி உணர்த்தி இருப்பது போல தெரிகிறது.

இனிமையான நாள்

இனிமையான நாள்

மேலும் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இனிமையான நாள் கடற்கரையில் எனது அணி வீரர்களுடன் என்று கோலி பதிவிட்டுள்ளார். ஆனால் இது குறித்து ரோகித் என்ன நினைக்கிறார் என்றும், ரோகித்தை ஒதுக்கி தள்ளமுடியாமல் வேறு வழியில்லாமல் தான் கோலி இந்த புகைப்படத்தை வெளியிட்டார் என்றும் பேச்சுகள் எழ தொடங்கி இருக்கின்றன.

Story first published: Wednesday, August 21, 2019, 16:17 [IST]
Other articles published on Aug 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+