ரோகித்துடன் சண்ட சத்தியமா நெசந்தான்..! மறுபடி ஒரு போட்டோ ரிலீஸ் செய்த கோலி..! ரசிகர்கள் ஆவேசம்
Recommended Video
புளோரிடா: ரோகித்துடன் சண்டை என்பது நிஜம் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இல்லாத மற்றொரு போட்டோவை ரிலீஸ் செய்திருக்கிறார் கோலி.
வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. நாளை முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது. அதற்காக இந்திய அணி அமெரிக்கா சென்றிருக்கிறது.
உலக கோப்பைக்கு பின்னர் கேப்டன் கோலி மற்றும் ரோகித் இடையே பிரச்சனை என்று செய்திகள் வெளியானது. அமெரிக்கா செல்லும் முன்பு கோலி எடுத்த புகைப்படத்தில் ரோகித் சர்மா போட்டோ இடம்பெற வில்லை. இதனால் அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆனது.

ரிஷப் பன்ட்டின் போட்டோ
அதனை தொடர்ந்து தற்போது ரிஷப் பன்ட் பதிவிட்ட போட்டோவில், புவனேஸ்வர் குமார், தவான், ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் பதிவிடப் பட்ட சில மணி நேரத்தில் வைரலாகியது. அதை பார்த்த ரசிகர்கள், கேப்டன் கோலி அப்போது எங்கு போனார்? எங்கிருக்கிறார் என்று கேள்விகளை எழுப்பினர்.

ரோகித் எங்கே?
அந்த விவகாரம் தற்போது அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறது. அந்த காரியத்தை கோலி ஒரு போட்டோவை ரிலீஸ் செய்து தொடங்கி வைத்து இருக்கிறார். அதில் இந்த முறையும் ரோகித் இல்லை.

இதுதான் ஸ்குவாட்
மேலும் அதனை ஸ்குவாட் (அதாவது விளையாடும் அணி) என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே மீண்டும் கோலி, ரோகித் பிளவு குறித்து ரசிகர்கள் சரமாரியாக கேள்விகளை தொடுத்து வருகின்றனர்.

ரசிகர்கள் குழப்பம்
ஏற்கனவே அணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் ரசிகர்கள் ஏகத்துக்கும் குழம்பி உள்ளனர். அணியில் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே தொடருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கோலியின் புதிய போட்டோவும் இப்போது ஒரு ரவுண்டு வர, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications