Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக்கோப்பைக்கு மொக்கை திட்டம் சொன்ன கோலி.. அதெல்லாம் நடக்காது என மறுத்த ரோஹித்

ஹைதராபாத் : ஒருநாள் போட்டிகள் உலகக்கோப்பை தொடர் 2019 ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

அதற்கான திட்டமிடல்களில் இந்தியா ஈடுபட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நடந்த நிர்வாக கமிட்டி கூட்டத்தில் கோலி ஒரு திட்டத்தை கூறி உள்ளார்.

கோலியின் திட்டத்தை ரோஹித் சர்மா உட்பட யாரும் ஒப்புக் கொள்ளவில்லை. ரோஹித் அந்த திட்டத்திற்கு எதிரான கருத்தையும் கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடர் முழுவதும் ஓய்வு

ஐபிஎல் தொடர் முழுவதும் ஓய்வு

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29 துவங்கி மே 19 வரை நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து உலகக்கோப்பை தொடர் ஜூன் 5 முதல் நடைபெற உள்ளது. எனவே, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறப் போகும் வேகப் பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடரில் ஓய்வில் இருக்க வேண்டும் என கோலி ஒரு திட்டத்தை கூறி இருக்கிறார்.

ஏன் இப்படி சொன்னார் கோலி?

ஏன் இப்படி சொன்னார் கோலி?

முக்கியமாக, புவனேஸ்வர் குமார், பும்ரா இருவரும் தான் இந்திய அணியின் பந்துவீச்சில் தூணாக இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் ஐபிஎல் தொடரில் ஆடினால், காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அடிப்படையிலும், அவர்கள் ஒன்றரை மாத ஐபிஎல் தொடரால் சோர்ந்து போவார்கள் என்ற கருத்தையும் அடிப்படையாக வைத்து கோலி இந்த திட்டத்தை கூறி இருக்கிறார்.

புவி, பும்ராவை காப்பாற்றும் திட்டம்

புவி, பும்ராவை காப்பாற்றும் திட்டம்

மற்ற பந்துவீச்சாளர்களுக்கு ஐபிஎல் தொடரில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஷமி, கலீல் அஹ்மது, உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் எந்த அணியில் இடம் பெற்றாலும், அவர்கள் தொடர் முழுவதும் பந்து வீசுவார்களா என்பது சந்தேகமே. எனவே, கோலியின் இந்த திட்டம் புவனேஸ்வர் மற்றும் பும்ராவை காப்பாற்றும் திட்டமாக இருந்தது.

ரோஹித் சொன்ன கருத்து

ரோஹித் சொன்ன கருத்து

இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமா? என அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது ரோஹித் சர்மாவிடம் இது பற்றி கருத்து கேட்டுள்ளனர். ரோஹித் தன் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ப்ளே-ஆஃப் சென்றால் நிச்சயம் தன் அணியில் இடம் பெற்று இருக்கும் பும்ராவை உடற்தகுதியோடு இருந்தால் நிச்சயம் பயன்படுத்துவேன். அவருக்கு ஓய்வு கொடுக்க முடியாது என கூறி உள்ளார்.

ஒருவர் கூட ஆதரிக்கவில்லை

ஒருவர் கூட ஆதரிக்கவில்லை

மேலும், அங்கே இருந்த பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் அணிகள் இந்த திட்டத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என கூறி இருக்கின்றனர். ஆக மொத்தத்தில், ஒருவர் கூட கோலியின் திட்டத்தை ஆதரிக்கவில்லை என தெரிகிறது.

Story first published: Thursday, November 8, 2018, 17:12 [IST]
Other articles published on Nov 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+