For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

RCB vs KKR: ரசல் ரணகளம்…! 7 சிக்சர்கள்..! 13 பந்துகளில் 48 ரன்கள்.. கோலியால ஒண்ணும் பண்ண முடியல

பெங்களூரு:ஐபிஎல் தொடரில் இதுபோன்றதொரு ஆட்டத்தை இனி பார்க்க முடியாது. ஒரே ஓவரில் பெங்களூரு அணியிடம் இருந்த வெற்றியை ஆண்ட்ரூ ரசல் பறித்துக் கொண்டு போய்விட்டார்.

பெங்களூருவில் ஐபிஎல் தொடரின் முக்கியமான போட்டி நடைபெற்றது. வெற்றி என்பதே எப்படி இருக்கும் என்று தெரியாதவாறு தொடர் தோல்விகளால் துவண்டு இருக்கும் ஆர்சிபி அணியும், கொல்கத்தா அணியும் மோதின.

முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 205 ரன்கள் குவித்தது. பார்த்தீவ் படேல் 25 ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி 84 ரன்கள் குவித்தார். டி வில்லியர்ஸ் 63 ரன்கள் அடித்தார்.

205 ரன்கள் குவிப்பு

205 ரன்கள் குவிப்பு

இறுதி கட்டத்தில் 13 பந்துகளில் 28 ரன்களை ஸ்டோய்னிஸ் குவிக்க ஆர்சிபி 205 ரன்களை குவித்தது. 206 ரன்கள் என்பது கடினமான இலக்கு என்ற நிலையில் யாருக்கு வெற்றி என்பது கணிக்கமுடியாத அளவுக்கு இருந்தது.

Virat Kohli: மரண மாஸ்..! 20 ஓவர் போட்டியில் 8,000 ரன்களை கடந்து புதிய சாதனை

11 ஓவர்களில் 100 ரன்கள்

11 ஓவர்களில் 100 ரன்கள்

தொடர்ந்து தமது இன்னிங்சை கொல்கத்தா ஆட தொடங்கியது. ஆரம்பத்தில் கொஞ்சம் அடித்து ஆடுவது போல தென்பட்டாலும்... அவ்வப்பொழுது கொல்கத்தா அணியில் லேசாக தொய்வு ஏற்பட்டது. 11 ஓவரில் கொல்கத்தா 100 ரன்களை எட்டியது. அடுத்த 10 ஓவர்களில் 106 ரன்கள் தேவை என்பதால் ஆட்டம் பெங்களூரு அணியிடமே இருப்பதாக பார்க்கப்பட்டது.

காயத்தால் விலகிய அவர்...! அதிர்ச்சியில் தல தோனி... சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. கவலையில் ரசிகர்கள்

150 ரன்கள்

150 ரன்கள்

தொடர்ந்து கொல்கத்தா ரன்களை சேர்க்க... கோலி டென்ஷனில் இருந்தார். 17வது ஓவரின் போது கொல்கத்தா 150 ரன்களை கடந்திருந்தது. அப்போது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் என்றிருந்தது.

மகிழ்ந்த ரசிகர்கள்

மகிழ்ந்த ரசிகர்கள்

இன்னும் 4 ஓவர்கள் பாக்கி.. எடுக்க வேண்டிய ரன்களோ கிட்டத்தட்ட 53 ரன்கள். மைதானத்தில் இருந்து ஆர்சிபி அணியினர், ரசிகர்கள் என எல்லாரும் பெங்களூரு அணிதான் ஜெயிக்கும் என்று நினைத்து கொண்டிருந்தார்.

ரசல் காட்டடி

ரசல் காட்டடி

ஆனால்.. ரசல் என்ற ஒற்றை மனிதரின் அதிரடி ஆட்டம்.. அந்த போட்டியை பெங்களூரிடம் இருந்து கொல்கத்தா பக்கம் கொண்டு சென்றுவிட்டது. 6வது விக்கெட்டுக்கு மட்டும் ரசலும், கில்லும் எடுத்த ரன்கள் 50.. அதுவும் 13 பந்துகளில்.

திருப்புமுனை ஓவர்

திருப்புமுனை ஓவர்

ஆட்டத்தின் திருப்புமுனை என்பது அந்த ஓவர்களில் இருந்தது தான் தொடங்கியது. 17வது ஓவரின் கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்கிறார். அணி வெற்றி பெற 18 பந்துகளில் 53 ரன்கள் தேவை. ஆக... எளிதாக பெங்களூரு அணி தமது முதல் வெற்றியை பதிவு செய்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

18வது ஓவரை சிராஜ் வீசுகிறார். ஆர்சிபி தான் வெற்றி பெறும் என்று வர்ணனையாளர்கள் முதல் அனைவரும் அறிவித்தவாறே இருந்தனர். அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் ரன்கள் இல்லை.3வது பந்து நோபால். பலம் கொண்ட ரசல் சிக்சர் அடிக்க.. அந்த பந்தில் இருந்து ஆட்டம் கொல்கத்தா கைகளுக்கு மாறுகிறது. 2 முறை நடுவரால் எச்சரிக்கப்பட்டதால் சிராஜ் மேற்கொண்டு பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டது.

23 ரன்கள் குவிப்பு

23 ரன்கள் குவிப்பு

ஸ்டோனிஸ் அழைக்கப்பட்டார். 3வது பந்து சிக்சர், 4வது பந்தும் சிக்சருக்கு பறக்கிறது. 5வது பந்து வொய்டு என அந்த ஓவரில் மட்டும் கொல்கத்தா அணியானது 23 ரன்களை குவித்தது. கடைசி 2 ஓவர்கள்... வெற்றிக்கு தேவையோ 30 ரன்கள். சவுதியின் பந்துகளை அதிரடியாக ஹாட்ரிக் சிக்சர்களாக விளாசி ரன்களை குவித்தார் ரசல். அவரின் மரண அடியில் கொல்கத்தா அந்த ஓவரில் மட்டும் 29 ரன்களை வாரிக் குவித்தது.

கொல்கத்தா அசத்தல்

கொல்கத்தா அசத்தல்

17வது ஓவர் வரை பெங்களூரு அணியிடம் இருந்த வெற்றியானது.. ரசலின் மரண அடியில் கொல்கத்தா வசம் சென்றது. இறுதியில் 5 பந்துகள் மீதம் வைத்த கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

7 சிக்சர்களுடன் 48 ரன்கள்

7 சிக்சர்களுடன் 48 ரன்கள்

கடைசி 2 ஓவர்களில் மட்டும் ரசலின் காட்டடியால் கொல்கத்தா அணி அசத்தலாக வென்றது. மொத்தம் 13 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ரசல், 48 ரன்களை குவித்தார். அதில் 7 சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். ஆக மொத்தத்தில் வெறும் 13 பந்துகளில் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. ரசலின் பேயடியை கண்ட பெங்களூரு அணியினர் மட்டுமல்ல.. ரசிகர்களும் கண்ணீர்விடாத குறை. ஐபிஎல் இருக்கும் வரை ரசலின் இந்த பேயாட்டம் மறக்க முடியாத இன்னிங்ஸ் என்பது மறுக்க முடியாத ஒன்று.

Story first published: Saturday, April 6, 2019, 0:49 [IST]
Other articles published on Apr 6, 2019
English summary
Kolkata player Russell smashes bangolre bowling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+