எப்படியும் எங்க வீட்டுக்கு 2 புள்ளி வந்திடும்.. தோல்வி குறித்து லக்னோ கேப்டன் குர்னல் பாண்டியா கலகல
அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் மோதும் ஆட்டத்தில் ரன்கள் பெருவாரியாக குவிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் தனி 227 ரன்களை எடுத்தது.
இதனை அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 171 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதன் மூலம் 16 புள்ளிகள் பெற்று குஜராத் அணி முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய லக்னோ அணி கேப்டன் குர்ணல் பாண்டியா, நாங்கள் அதிக ரன்கள் அடிக்க விட்டோம்.

227 ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அனைத்து ஓவர்களும் நாம் அதிரடியாக விளையாட வேண்டும். இதுவே 200 எண்கள் என்றால் நாம் ஒரு சில ஓவர்கள் அமைதியாக விளையாடலாம். ஆனால் 227 ரன்கள் இலக்கு என்ற போது அப்படி விளையாட முடியாது. ஆடுகளமும் கடைசி ஆறு ஏழு ஓவர்களில் கொஞ்சம் தோய்வாக இருந்தது. நாங்கள் 200 முதல் 210 ரன்களுக்கு குஜராத் அணியை நாங்கள் சுருட்டி இருந்திருக்க வேண்டும்.
எங்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்படுவேன் என்று கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை. அதுவும் ஹர்திக் கேப்டனாக நான் எதிர்கொள்வேன் என்றும் நினைக்கவில்லை. ஆனால் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
என் தாய் இந்த தருணத்தை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டார். போட்டிக்கு முன்பு அவர் சொன்னது நீங்கள் இருவர்களில் யார் ஜெயித்தாலும் இரண்டு புள்ளிகள் நமது வீட்டுக்கு தான் வரும். எனவே மகிழ்ச்சியாக விளையாடுங்கள் என்று கூறினார். எனக்கும் என்னுடைய தம்பி ஹர்திக் பாண்டியாவுக்கும் அவ்வளவு பாசம் இருக்கிறது. களத்தில் நாங்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டாலும் அது வெறும் இரண்டு நிமிடங்களில் முடிந்து விடும் என்று குர்னல் பாண்டியா கூறினார்.


Click it and Unblock the Notifications