3 பந்துகளில் 10 ரன்கள்.. 2 சிக்சர்களால் ராபின்சிங்கை தெறிக்கவிட்ட குருணல் பாண்டியா! வைரல் வீடியோ
மும்பை:ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ராபின்சிங்கை, தெறிக்க குருணல் பாண்டியாவின் வீடியோ வைரலாகி உள்ளது.
ஐபிஎல் 12வது சீசன் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இந்தியா மட்டுமல்லாது... உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
ஐபிஎல்லில் சக்சஸ் அணிகள் என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தான். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இறுதி போட்டிக்கு சென்ற போதெல்லாம் கோப்பையை வென்றுள்ளது.

கவரும் மும்பை அணி
ஐபிஎல்லில் வெற்றிகரமான அணி என்பதோடு.... அதிக ரசிகர்களை பெற்ற அணியாகவும் இருப்பது மும்பை அணி. ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, பும்ரா ஆகியோர் அணியின் நிரந்தர வீரர்கள்.

சிறப்பாக ஆட போட்டி
ஹர்திக் மற்றும் குருணல் பாண்டியா இருவருமே வலைபயிற்சியில் இருக்கும் போது... சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இக்கட்டான நிலையில் சிறப்பாக எப்படி விளையாட வேண்டும் என்று பேட்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் ஒரு போட்டி வைக்கிறார்.
10 ரன்கள் தான் போட்டி
அதை குருணல் பாண்டியா ஏற்று கொள்கிறார். அதாவது, 3 பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வலை பயிற்சியில் ஆடுமாறு குருணல் பாண்டியாவிடம் ராபின் சிங் சொல்லி இருக்கிறார்.

வலைதளங்களில் வைரல்
அவரது சவாலை ஏற்ற குருணல் பாண்டியா களத்தில் இறங்குகிறார். முதல் பந்து வீசப்படுகிறது... அதை சரியாக அடிக்கவில்லை. மண்டை காய்ந்த அவர்... அடுத்து வந்த 2 பந்துகளை மாறி, மாறி சிக்சருக்கு விரட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications